Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
தலையில் எத்தனை வகையான பேன்கள் வாழ்கின்றன என்பது தெரியுமா? அதை எப்படி தடுக்கலாம்?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை இந்த பேன் தொல்லை தான். நாமும் இதற்காக நிறைய முறைகளை முயற்சி செய்து பார்த்து இருப்போம். ஆனால் எதுவுமே சரியான தீர்வை கொடுப்பதில்லை.
இதற்கு காரணம் முதலில் பேன்கள் எதனால் உருவாகின்றன அது எந்த வகையான பேன் என்பதை தெரியாமல் சிகிச்சை பெறுவதால் ஏற்படுகிறது. இந்த பேன்கள் நம் இரத்தத்தை உறிஞ்சக்கூடிய பூச்சி வகையாகும்.

இந்த பேன்கள் நம் இரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழ்கின்றன. இந்த பேன்களின் முட்டைகள் நிட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த முட்டைகள் முடியில் ஒட்டிக் கொண்டு நமக்கு அரிப்பை உண்டாக்க கூடியது. இந்த பேன்களை சில இயற்கையான முறையில் போக்க முடியும். அதை எப்படி செய்யலாம் மற்றும் பேன்களின் வகைகள் பற்றியும் இக்கட்டுரையில் நாம் காண்போம்.
பேன்கள் எப்படி உருவாகிறது?
இந்த பேன்கள் ஒருவரின் தலையில் இருந்து மற்றவருக்கு தொடர்பு மூலம் பரவுகிறது. இது குதிக்காது மற்றும் பறக்காது. அதே மாதிரி பேன் இருக்கும் ஒருவருடைய சீப்பு மற்றும் ஹேர் பிரஷ் மூலம் இன்னொருவருக்கு பரவலாம். இந்த பேன்கள் கருப்பு, பழுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. தலையை சரியாக சுத்தமாக பராமரிப்பதால் மட்டும் ஏற்படுவதில்லை. இந்த பேன்கள் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கும் எளிதாக பரவும்.
பேன்கள் இருப்பதை எப்படி அறிவது?
பேன்கள் இருக்கும் தலையில் அரிப்பு இருந்து கொண்டே இருக்கும். இதனால் அடிக்கடி சொறிந்து கொண்டே இருப்பார்கள். பேன்கள் இரவில் அதிக சுறுசுறுப்பாக இருக்கும். இதனால் நிறைய பேருக்கு இரவில் அரிப்பு அதிகமாகி தூக்கமின்மை பிரச்சினை ஏற்படுகிறது.
பேன்களின் வகைகள்
பேன்களில் மூன்று வகையான பேன்கள் உள்ளன. அவை பின்வருமாறு:
தலைப்பேன் - இந்த தலைப்பேன் உங்கள் உச்சந்தலையில் காணப்படுகிறது. இந்த தலைப்பேன் உங்கள் தலையில் மட்டும் இருப்பதில்லை கழுத்து, காது சில நேரங்களில் உங்கள் மார்பு வரை நகரக் கூடியது.
உடம்பு பேன்கள் - இந்த பேன்கள் உடம்பை சரியாக சுத்தம் செய்யாத நபர்களிடம் ஏற்படுகிறது. தினமும் குளிக்காமல் இருப்பவர்களிடம் இந்த பேன்கள் ஏற்படுகின்றன. இது நீங்கள் உடுத்தும் ஆடைகள் மற்றும் படுக்கைகளில் காணப்பட்டு அரிப்பை உண்டாக்கும்.
அந்தரங்க பகுதியில் காணப்படும் பேன்கள் - இந்த பேன்கள் அந்தரங்க பகுதிகள், மார்பு முடிகள், புருவங்கள், கண் இமைகள் போன்றவற்றில் காணப்படுகிறது. இவை சிறிய நண்டுகள் என்று அழைக்கப்படுகிறது.
தலைப்பேனை ஒழிக்க வழிமுறைகள்:
* நீங்கள் பயன்படுத்தும் சீப்பு, ஹேர் பிரஷ் மற்றும் ஹெட் பேண்ட் போன்றவற்றை வெந்நீரில் போட்டு சுத்தமாக கழுவுங்கள். வாரத்திற்கு ஒரு முறை என இதைச் செய்து வாருங்கள். அதே மாதிரி உங்கள் சீப்பு, ஹேர் பிரஷ்ஷை ஒரு போதும் மற்றவருக்கு பகிராதீர்கள்.
* உங்கள் ஆடைகள் மற்றும் படுக்கை விரிப்புகளை வெந்நீரில் ஊற வைத்து துவையுங்கள். இது உங்கள் உடம்பில் இருக்கும் பேனை ஒழிக்க உதவுகிறது.
* பேன் சீப்பை பயன்படுத்தி அவ்வப்போது தலையில் இருக்கும் பேனை எடுத்து வாருங்கள். இதற்காக பேன் மருந்தும் மருந்தக கடைகளில் கிடைக்கிறது.
வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய்
தேங்காயெண்ணெய்யை வெதுவெதுப்பாக சூடாக்கி தலை மற்றும் முடிகளில் தடவி வரலாம். தேங்காயெண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது பேன்களை மூச்சுத் திணற வைக்கிறது. குறைந்தது அரை மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். பிறகு பேன்கள் வெளியேற ஆரம்பித்து விடும். பிறகு சீப்பைக் கொண்டு சீவி எடுத்து விடுங்கள்.
அத்தியாவசிய எண்ணெய்யை பயன்படுத்துங்கள்
அத்தியாவசிய எண்ணெயில் நிறைய நச்சுக்கள் உள்ளன. எனவே அதை நேரடியாக முடிகளில் தடவக் கூடாது. டீ ட்ரி ஆயில், ஆலிவ் ஆயில், லாவண்டர் எண்ணெய், வேப்பெண்ணெய், யூகலிப்டஸ், புதினா எண்ணெய் மற்றும் அதிமதுரம் போன்ற எண்ணெயை தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேயுங்கள். இந்த எண்ணெயை தடவிய பிறகு 10 மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு பேன் சீப்பு கொண்டு இழுத்து விட்டு ஷாம்பு போட்டு தலைக்கு குளியுங்கள்.
மருத்துவரை அணுகுதல்
பேன் மருந்தை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்ப்பாலூட்டும் பெண்கள் பேன் மருந்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பேன் மருந்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பேன் மருந்தில் அதிக நச்சுக்கள் இருப்பதால் தவிர்ப்பது நல்லது. இது அவர்களின் நரம்பு மண்டலத்தை பாதிக்க வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications