Latest Updates
-
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம்
உங்களுக்கு நீளமான முடி இருக்கா? அப்ப 'இந்த' டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க...முடி கொட்டாம அப்படியே இருக்குமாம்!
எல்லாப் பெண்களுக்கும் நீளமான கூந்தல் வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் நிறைய பெண்களுக்கு ராபுன்சல் மாதிரி நீளமான கூந்தல் வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் நீளமான கூந்தலில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் அதை பராமரிப்பது மிகவும் கடினம்.
கூந்தலுக்கு போதிய போஷாக்கு மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லை என்றால் கூந்தல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீளமான கூந்தலில் நிறைய சிக்கல்களும் உண்டாக வாய்ப்புள்ளது. எனவே நீளமான கூந்தல் இருப்பவர்கள் கீழ்க்கண்ட பராமரிப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம். அதைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

உச்சந்தலையில் கவனம் செலுத்துங்கள்
நீளமான கூந்தல் உடையவர்கள் உச்சந்தலையில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். ஏனெனில் கூந்தலின் வேர்ப் பகுதி வலிமையாக இருந்தால் தான் கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்கும். உச்சந்தலையை அழுக்கு இல்லாமல் நன்கு கவனித்துக் கொள்வது இரத்த ஓட்டத்தை அதிகரித்து கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க உதவுகிறது. இதன் விளைவாக நீங்கள் வலுவான முடியைப் பெற முடியும். முடி உதிர்தலையும் குறைக்கிறது.
உங்கள் உச்சந்தலையில் உள்ள எண்ணெய், அழுக்குகள் போன்றவற்றை நீக்க மென்மையான ஷாம்புகளை பயன்படுத்தி வரலாம். மென்மையான ஷாம்புகளைக் கொண்டு உச்சந்தலையை கழுவுவது நல்லது. இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், முடியின் வேர்களைத் தூண்டவும் உதவுகிறது.
உச்சந்தலையை லேசாக மசாஜ் செய்து விடலாம். உச்சந்தலையை மசாஜ் செய்து விடுவதற்காக 340 பேர்கள் இதில் ஈடுபட்டனர். சராசரியாக 7.4 மாதங்களுக்கு தினசரி 11-20 நிமிடங்கள் மசாஜ் செய்வதன் மூலம், 68 % முடி வளர்ச்சியை பெற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் வையுங்கள்
நீளமான கூந்தலை உடைய பெண்கள் கூந்தலுக்கு சூடான எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்யுங்கள். இது உங்கள் முடியின் தடிமனை அதிகரிக்கிறது. இது உங்கள் மயிர்க்கால்களுக்கு வலுவூட்டுகிறது. இறந்து போன முடி தண்டுகளை புதுப்பிக்கிறது.
தேங்காயெண்ணெய், லாவண்டர், பாதாம் எண்ணெய்களை பயன்படுத்தி மசாஜ் செய்து வரலாம். உச்சந்தலையில் மசாஜ் செய்வது உங்கள் முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது.
- சூடான எண்ணெயை உங்கள் விரல்களில் தடவி விரல் நுனியைக் கொண்டு உச்சந்தலையை மசாஜ் செய்து வாருங்கள்.
- உங்கள் தலைமுடிக்கு நன்றாக எண்ணெயை தடவி ஊற விடுங்கள்.
- தலையில் எண்ணெய் நன்றாக உறிஞ்ச 10 நிமிடங்களுக்கு ஒரு சூடான துண்டை சுற்றிக் கொள்ளுங்கள். 1-2 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும்.
- பிறகு குளிர்ந்த நீர் மற்றும் லேசான ஷாம்பு கொண்டு கூந்தலை அலசி வாருங்கள்.
அடிக்கடி ஷாம்பு பயன்படுத்துவதை நிறுத்துங்கள்
அடிக்கடி ஷாம்பு பயன்படுத்துஙது உங்கள் கூந்தலை சேதப்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் உங்கள் கூந்தல் வறண்டு போய் உடைந்து போக நேரிடும். சில ஷாம்புக்களில் சல்பேட்டுகள் முடியை அதிகமாக சேதப்படுத்துகிறது. எனவே முடிந்த வரை சல்பேட் இல்லாத ஷாம்புவை தேர்ந்தெடுங்கள்.
ஷாம்புவைக் கொண்டு கூந்தலில் உள்ள இயற்கையான எண்ணெயை அகற்ற முடியும். ஷாம்பு போடும் போது மென்மையாக தேயுங்கள். ஏனெனில் ஈரமாக இருக்கும் போது உங்கள் தலைமுடி மென்மையாக இருக்கும். எனவே ஷாம்புவை கடுமையாக பயன்படுத்தாமல் மென்மையாக பயன்படுத்துங்கள்.
உங்கள் கூந்தலை மெதுவாக உலர வையுங்கள்
தலைக்கு குளித்த பிறகு உங்கள் கூந்தலை மென்மையாக உலர வையுங்கள். காற்றில் உலர்த்தி மெதுவாக காய வையுங்கள். உங்கள் தலைமுடியை உலர்த்த குளியல் துண்டை பயன்படுத்த வேண்டாம். அது தலைமுடியை கரடுமுரடானதாக மாற்றும்.
சிக்கல்களை உருவாக்கும். எனவே மெல்லிய மற்றும் மைக்ரோ ஃபைபர் துண்டுகளை பயன்படுத்த வேண்டும். இது உங்கள் கூந்தலை எளிதாக உலர்த்துகிறது.
அகன்ற சீப்பை பயன்படுத்துங்கள்
நீண்ட கூந்தல் உங்களுக்கு சிக்கலை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. எனவே சிக்கலை அகற்ற அகலமான பல் கொண்ட சீப்பை பயன்படுத்துங்கள். சேதம் ஏற்படாத வண்ணம் பயன்படுத்துங்கள். இதன் மூலம் முடி உதிர்தலை தடுக்க முடியும்.
தூங்கும் முன் இரத்த ஓட்டத்தை பெற படுக்கைக்கு முன் தலைமுடியை வாருதல் நல்லது. இதன்மூலம் உச்சந்தலையில் சிறந்த இரத்த ஓட்டத்தை பெற முடியும். ஈரமான கூந்தலை சீப்பால் சீவக் கூடாது. இதனால் கூந்தல் உடைந்து போக வாய்ப்புள்ளது.
பருத்தியால் ஆன தலையணை உறைகள் வேண்டாம்
பருத்தி தலையணை உறையில் படுக்கும் போது காலையில் சிக்கல்கள் உண்டாக வாய்ப்புள்ளது. அதற்குப் பதிலாக சாடின் மற்றும் பட்டுத் துணியால் ஆன உறைகளை பயன்படுத்துங்கள். இவை உங்கள் தலைக்கு மென்மையாகவும் உராய்வு இல்லாமல் தடுக்கவும் உதவுகிறது.
பருத்தியானது பட்டை விட அதிக நுண் துளைகள் கொண்டு உள்ளது. பட்டு தலையணை உறைகள் உங்கள் தலைமுடியின் ஈரப்பதத்தை அப்படியே வைத்திருக்க உதவுகிறது. மேலும் சிகை அலங்காரங்கள் நீண்ட நேரம் கலையாமல் அப்படியே இருக்கும்.



Click it and Unblock the Notifications
