Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம்
இரண்டே நாட்களில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும் சில இயற்கை வழிகள்!
சருமத்தில் கருமையான புள்ளிகள் வருவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. எதுவாயினும், இந்த கரும்புள்ளிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு போக்க முடியும்.
உங்கள் முகத்தில் அழகை கெடுக்கும் வகையில் கருமையான தழும்புகள் உள்ளதா? அதுவும் திடீரென்று வந்துள்ளதா? எந்த க்ரீம்களை பயன்படுத்தினாலும் அது போகவில்லையா? அப்படியானால் நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு, அதை நீக்க முயற்சித்துப் பாருங்கள்.

பொதுவாக சருமத்திற்கு நிறத்தை வழங்குவது மெலனின் என்னு நிறமிப் பொருள் தான். இந்த மெலனின் தான் சருமத்தை சூரிய கதிர்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது. எப்போது ஒருவரது சருமத்தில் நீண்ட நேரம் சூரியக்கதிர்கள் படுகிறதோ, அப்போது மெலனோசைட்டுகள் அல்லது மெலனினை உற்பத்தி செய்யும் செல்கள், அதிகப்படியான மெலனின் உற்பத்தி செய்கிறது. இதன் விளைவாக சருமத்தில் சில சமயங்களில் கருமையான புள்ளிகள் தோன்றும்.
ஆனால் சருமத்தில் கருமையான புள்ளிகள் வருவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. எதுவாயினும், இந்த கரும்புள்ளிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு போக்க முடியும். இப்போது அந்த இயற்கை பொருட்கள் என்ன மற்றும் அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதைக் காண்போம்.

1. பால்
சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க பால் பெரிதும் உதவி புரியும். அதற்கு பாலை பஞ்சுருண்டையில் நனைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால், விரைவில் கரும்புள்ளிகள் மறையும். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க குளிர்ச்சியான பாலைப் பயன்படுத்த வேண்டும்.

2. மசூர் பருப்பு/மைசூர் பருப்பு
மசூர் பருப்பில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகளவில் உள்ளன. எனவே இது கரும்புள்ளிகளை போக்குவதில் சிறந்தது. அதற்கு 50 கிராம் மசூர் பருப்பை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

3. பப்பாளி
பப்பாளியில் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் உள்ளது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, சரும செல்களுக்கு புத்துயிர் அளிக்கும். அதற்கு நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.

4. மஞ்சள் தூள்
மஞ்சள் சருமத்தில் மெலனின் அளவுக்கு அதிகமாக உற்பத்தியாவதைத் தடுப்பதோடு, சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கும். அந்த மஞ்சள் தூளை ஒரு டீஸ்பூன் எடுத்து, அத்துடன் 1-2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும்.

5. உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் சருமத்தை பொலிவாக்கும் பிற பொருட்கள் உள்ளதால், இது சருமத்தில் உள்ள கருமையான புள்ளிகளை நீக்க உதவும். அதற்கு உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் எலுமிச்சை சாறு அல்லது தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். வறட்சியான சருமத்தைக் கொண்டவர்கள் தேனைப் பயன்படுத்த வேண்டும். பின் அதை முகத்தில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

6. சிவப்பு வெங்காயம்
வெங்காயம் தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வளிப்பதில் சிறந்தது என்பதை அனைவருமே அறிவோம். ஆனால் அந்த வெங்காயம் சரும பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வை வழங்கும். அதுவும் சருமத்தில் உள்ள கருமையான புள்ளிகளை நீக்க, வெங்காயத்தை வெட்டி, அதை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.



Click it and Unblock the Notifications