Latest Updates
-
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க.. -
40 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பு - எப்படி? இந்த ஒரு ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்!
உங்க முகத்தில் எப்பவும் எண்ணெய் வழியுதா? அப்ப இந்த 3 பொருளை கலந்து தடவுங்க..
கெமிக்கல் கலந்த பொருட்களைக் கொண்டு முகத்தில் உள்ள எண்ணெய் பசையை போக்குவதற்கு பதிலாக, ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு ஆரோக்கியமான வழியில் போக்கலாம்.
வெயில் காலத்தில் அதிகம் வியர்ப்பதனால் பலரது முகம் எந்நேரமும் எண்ணெய் வழிந்தவாறு இருக்கும். இப்படி எப்போதும் முகத்தில் எண்ணெய் வழிந்தவாறு இருந்தால், முகம் பார்ப்பதற்கு அசிங்கமாகவும் கருமையாகவும் காணப்படும். அதோடு எண்ணெய் பசையுடன் முகம் இருந்தால், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்றவை வர ஆம்பித்துவிடும். சிலர் இயற்கையாகவே எண்ணெய் பசை சருமத்தைக் கொண்டிருப்பார்கள். உங்கள் முகத்தில் அதிகம் எண்ணெய் வழிவது போன்று இருந்தால், உடனே அதைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்க, பலரும் சோப்பு அல்லது ஃபேஸ் வாஷைக் கொண்டு முகத்தை கழுவுவார்கள். ஆனால் கெமிக்கல் கலந்த பொருட்களைக் கொண்டு முகத்தில் உள்ள எண்ணெய் பசையை போக்குவதற்கு பதிலாக, ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு ஆரோக்கியமான வழியில் போக்கலாம். இப்போது சருமத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்க உதவும் சில எளிய வழிகளைக் காண்போம்.

தயிர்
உங்கள் முகத்தில் எண்ணெய் அதிகம் வழிகிறதா? அப்படியானால் தயிரைப் பயன்படுத்துங்கள். ஏனெனில் தயிர் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. அதற்கு தயிரை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

ஓட்ஸ்
ஓட்ஸ், தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவில் எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். எண்ணெய் பசை சருமத்தைக் கொண்டவர்கள், ஓட்ஸ் மற்றும கற்றாழை ஜெல்லை சரிசம அளவில் எடுத்து நன்கு கலந்து, முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும்.

மஞ்சள்
முகத்தில் அதிக எண்ணெய் பசையைக் கொண்டவர்கள், ஒரு பௌலில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால், முகத்தில் வழியும் எண்ணெயைக் கட்டுப்படுத்தலாம்.

எலுமிச்சை
ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 1/2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசை கட்டுப்படும்.

கோதுமை மாவு
ஒரு பௌலில் 1 டீஸ்பூன் கோதுமை மாவில், 1 டீஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து கெட்டியாக பேஸ்ட் தயாரித்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், சருமத்தில் எண்ணெய் பசையைக கட்டுப்படுத்தலாம்.

தக்காளி
தக்காளியில் எண்ணெயை உறிஞ்சும் அமிலம் உள்ளதால், இது சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை உறிஞ்சி வெளியேற்ற உதவுகிறது. அதற்கு தக்காளியை வெட்டி, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.



Click it and Unblock the Notifications
