For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடைக்காலத்தில் சருமத்தை கருமையாகாமல் அழகாக பராமரிப்பது எப்படி?

குளிர் காலம் போய் கோடை காலம் ஆரம்பமாகி விட்டது. நமது சருமத்தை ஒவ்வொரு கால கட்டத்திற்கு ஏற்ற வகையில் பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது.

|

குளிர் காலம் போய் கோடை காலம் ஆரம்பமாகி விட்டது. நமது சருமத்தை ஒவ்வொரு கால கட்டத்திற்கு ஏற்ற வகையில் பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. தடிமனான ஆடைகளை எல்லாம் தள்ளி விட்டு கோடை காலத்தில் பருத்தி ஆடைகளை அணிய ஆரம்பித்து விடுவோம். அதே மாதிரி உங்க சரும பராமரிப்பு அழகு பொருட்களையும் நீங்கள் மாற்ற வேண்டியிருக்கிறது. இதுவரை நீங்கள் குளிர்காலத்திற்கு பயன்படுத்திய மாய்ஸ்சுரைசர் க்ரீம்கள் எல்லாம் கோடை காலத்திற்கு ஏற்றதாக இருக்காது. கனமான மாய்ஸ்சுரைசர் க்ரீம்களை தள்ளி விட்டு லேசான மாய்ஸ்சுரைசர் க்ரீம்களை இந்த கோடை காலத்திற்கு என்று பயன்படுத்த வேண்டியிருக்கும். அப்பொழுது தான் வெயில் காலத்தில் வரும் சரும பிரச்சனைகளை ஓரங்கட்ட முடியும்.

Adaptive Skin Care Routine: From Winters To Summers

ஏனெனில் கோடை காலத்தில் அதிகப்படியான சூரிய ஒளி சருமத்தில் பட வாய்ப்புகள் அதிகம். இந்த காலத்தில் சருமம் உடல் வெப்பநிலையை குறைத்து சருமத்தில் எண்ணெய்களை வெளியேற்றும். இதனால் பருக்கள், வியர்வை மற்றும் தடிப்புகள் போன்ற பிரச்சனைகளும் வருகின்றன. எனவே நீங்கள் கோடை காலத்திற்கு என்றே தனியான சரும பராமரிப்பை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதை எப்படி செய்யலாம் என்று இப்பொழுது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாய்ஸ்சுரைசரை மாற்றுங்கள்

மாய்ஸ்சுரைசரை மாற்றுங்கள்

கோடை காலத்தில் உங்க மாய்ஸ்சரைசர் ஜெல் வடிவத்தில் இருக்க வேண்டும். ஹைலூரோனிக் அமிலம் போன்ற பொருட்கள் அல்லது நீர் சார்ந்த மாய்ஸ்சரைசர்களைத் தேர்வு செய்யுங்கள். இது உங்க சருமத்திற்கு குளிர்ச்சியையும் ஈரத்தையும் கொடுக்கும்.

வாரத்திற்கு இரண்டு முறையாவது ஸ்க்ரப் செய்யுங்கள்

வாரத்திற்கு இரண்டு முறையாவது ஸ்க்ரப் செய்யுங்கள்

உங்க சருமத்தை ஸ்க்ரப் செய்வது சருமத்தை சுத்தப்படுத்தவும், தோலின் மீதுள்ள இறந்த செல்களை வெளியேற்றவும் உதவுகிறது. இதன் மூலம் தோலின் மீது அடைத்துள்ள அழுக்குகள் வெளியேறி சரும துளைகள் தடையில்லாமல் சுவாசிக்க முடியும். இதனால் சரும வறட்சி நீங்கி சருமம் சுத்தம் பெறும்.

ஆல்கஹால் க்ளீன்சர் பயன்படுத்துங்கள்

ஆல்கஹால் க்ளீன்சர் பயன்படுத்துங்கள்

உங்க க்ளீன்சரை அதிக ஆல்கஹால் கொண்டதாக மாற்றுங்கள் அல்லது மைக்கேலர் வாட்டராக மாற்றுங்கள். இது உங்க சருமத்தில் உள்ள கூடுதல் எண்ணெய் பசையை உறிஞ்சி சருமம் பளபளப்பாகவும் ஜொலிப்பாகவும் இருக்க உதவும்.

வைட்டமின் சி சீரம்

வைட்டமின் சி சீரம்

நீங்கள் பயன்படுத்தும் சீரம் வைட்டமின் சி கொண்டதாக இருக்கட்டும். வைட்டமின் சி சருமத்தில் ஏற்படும் நிறத் திட்டுகளை தடுக்கிறது. மேலும் சரும கோடுகள் மற்றும் சருமம் சீக்கிரம் தொய்வடைவதை தடுக்கிறது. மொத்தத்தில் சருமம் வயதாவதை தடுத்து சீக்கிரம் இளமையுடன் இருக்க உதவி செய்கிறது. முகத்தை க்ளீனிங் செய்த பிறகு சீரம் தடவுங்கள். பிறகு மாய்ஸ்சுரைசர் அப்ளே செய்யுங்கள்.

பருக்களை போக்கும் க்ளீன்சர்

பருக்களை போக்கும் க்ளீன்சர்

உங்க முகத்தில் அடிக்கடி பருக்கள் போன்றவை வரும் என்றால் சாலிசிலிக் அமில க்ளீன்சரை பயன்படுத்துங்கள். இது சரும துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்க உதவும். அதே மாதிரி யூகலிப்டஸ் அடிப்படையிலான சுத்தப்படுத்திகளையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.

நீண்ட நேரம் குளிக்க வேண்டாம்

நீண்ட நேரம் குளிக்க வேண்டாம்

கோடை காலத்தில் குளிக்கும் போது குறைந்த நேரம் மட்டுமே குளியுங்கள். அதிக நேரம் குளிப்பது உங்க சருமத்தில் இயற்கையாகவே சுரக்கும் எண்ணெய் பசையை நீக்கி வறட்சியை ஏற்படுத்தும்.

நிறைய தண்ணீர் குடியுங்கள்

நிறைய தண்ணீர் குடியுங்கள்

கோடைக்காலத்தில் சரும ஈரப்பதத்தை தக்க வைக்க நிறைய தண்ணீர் குடிப்பது அவசியமாகிறது. அதே மாதிரி கோடை காலத்தில் கிடைக்கும் முலாம்பழம், தர்பூசணி போன்றவற்றையும் சாப்பிடுங்கள். இது உங்க சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவும். முலாம் பழத்தில் உள்ள ஆக்ஸினேற்றிகள் சருமம் வயதாகுவதை தடுக்கிறது. மேலும் சரும SPF (சூரிய ஒளியை தாங்கும் திறன்) காரணியை அதிகரிக்கிறது.

கண்கள் மற்றும் உதடுகளை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்

கண்கள் மற்றும் உதடுகளை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்

கோடை காலத்தில் சருமத்தை எப்படி ஸ்பெஷலாக பராமரிக்கிறமோ, அதோ மாதிரி கண்கள் மற்றும் உதடுகளையும் பராமரிக்க வேண்டும். கண்களை பாதுகாக்க வெளியே செல்லும் போது சன் கிளாஸ் அணிந்து செல்லலாம். வீட்டில் இருக்கும் போது வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கை வட்டமாக வெட்டி கண்களில் வைத்து குளிர்ச்சி ஊட்டலாம். சூரியனின் அதிகப்படியான வெயிலில் இருந்து உதடுகளை காக்க சன் ஸ்க்ரீன் (SPF) அடங்கிய லிப் பாம்கள் தற்போது கிடைக்கின்றன. அதை வாங்கி பயன்படுத்தி வரலாம்.

சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்

சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்

கோடை காலத்தில் நீர் சார்ந்த 40+++ SPF சன்ஸ்கீரின் வாங்கி பயன்படுத்துங்கள். அதே மாதிரி வெளியே செல்லும் போது முகம், கழுத்து, மார்பு, கைகள் இவற்றை துணியை கொண்டோ க்ளவ்ஸ் அணிந்தோ மூடி கொள்ளுங்கள். அதே மாதிரி முடிகளை சுற்றி சன் ஸ்கிரீன் ஸ்பிரே பயன்படுத்துங்கள்.

மேற்கண்ட டிப்ஸ்கள் அனைத்தும் இந்த கோடை காலத்திற்கு உதவியாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். இதன் மூலம் உங்க சரும அழகை பராமரிக்க தவறாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Adaptive Skin Care Routine: From Winters To Summers

Summers are the time to enjoy and have fun, don’t be afraid of the sun instead of prep your skin better.
Desktop Bottom Promotion