Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
கரும்புள்ளிகளை நீக்குவதற்கான சில எளிய வழிகள்!!!
'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பதற்கேற்ப நாம் ஒவ்வொருவரும் நமது முகத்தை அழகாக வைத்துக் கொள்ளவே ஆசைப்படுகின்றோம். இன்று பல அழகு நிலையங்கள் வந்த போதிலும், அவற்றில் கட்டணங்கள் அதிகமாக இருக்கின்றன. அதனால், நாம் வீட்டிலேயே இயற்கையான முறையில் சிக்கனமாகவும், நம்மை அழகுப்படுத்திக் கொள்ளலாம். அதற்கான சில வழிகளை இப்பொழுது பார்க்கலாம்.
கரும்புள்ளிகள் பெரும்பாலும் முகத்தில் தான் தென்படும். பெரும்பாலும் எண்ணெய்ப் பசை உள்ள சருமத்தில் தான் தென்படும். இந்த கரும்புள்ளிகள் பருக்களாக மாறும். ஆகவே 'வரும் முன் காப்போம்' என்னும் பழமொழிக்கேற்ப, அவை பருக்களாக மாறும் முன், சரியான சிகிச்சைகளை மேற்கொண்டால், நிச்சயம் அந்த கரும்புள்ளிகளை போக்குவதோடு, சருமத்தை பொலிவோடும் அழகாகவும் வைத்துக் கொள்ளலாம். இப்போது இயற்கை முறையில் கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி என்று பார்ப்போம்.

உருளைக்கிழங்கு
கரும்புள்ளிகளை நீக்குவதற்கு முதலில் தேவைப்படுவது உருளைக்கிழங்கு தான். அதில் கருப்பு மற்றும் பச்சை நிறப் புள்ளிகள் இல்லாதவாறு இருக்க வேண்டும். பின் உருளைக்கிழங்கை சீவிக் கொள்ளவும். பின்பு அதனை கரும்புள்ளிகள் மீது 10 நிமிடங்கள் தேய்க்கவும். காய்ந்த பின்பு முகத்தை கழுவவும்.

எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாற்றினை முகத்தில் தடவினா,ல் கரும்புள்ளிகளை நீக்குவது மட்டுமல்லாமல், அதிகப்படியான எண்ணெய்ப் பசை சருமத்தில் இருந்தும் விடுபடலாம்.

சர்க்கரை
ஒரு மேஜை கரண்டி சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து, அதனை மூக்கிலும் கன்னத்திலும் உள்ள கரும்புள்ளிகள் மீது தடவினால், அவை குறையக்கூடும். அதுமட்டுமின்றி இந்த கலவை சருமத்தை பளிச்சிட செய்யவும் உதவும்.

தயிர்
2 மேஜை கரண்டி தயிருடன், 2 மேஜைகரண்டி ஓட்ஸ் பொடி மற்றும் 2 மேஜை கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இதனை கரும்புள்ளிகள் மீது தடவி 10 நிமிடங்கள் காய விடவும். பின்னர் முகத்தை அலம்பவும். இது நல்ல பலனைத் தரும்.

ஆலிவ் ஆயில்
சிறு துளி ஆலிவ் எண்ணெயுடன், எலுமிச்சை சாறு சேர்த்து உபயோகித்தால், அது கரும்புள்ளிகளை நீக்கும். அதற்கு இதனை முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மீது சில நிமிடங்கள் தடவி காய வைக்கவும். பின்னர் முகத்தை அலம்பவும்.

ஆயில் மசாஜ்
ஆலிவ் எண்ணெயை கொண்டு முகத்தை அடிக்கடி மசாஜ் செய்து வரவும். இது கரும்புள்ளிகள் வராமல் தடுக்க உதவும். அதனால், முகத்தில் ஆலிவ் எண்ணெயை தடவி கரும்புள்ளிகள் வராமல் தடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக முகத்தில் ஆலிவ் எண்ணெயை தடவி, சூடான நீரில் நனைத்த துணியை முகத்தில் மூடி 15 நிமிடங்கள் காய வைக்கவும். இதனால் இந்த வெதுவெதுப்பான துணி சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கி, கரும்புள்ளிகளை தளர்வடையச் செய்யும்.

ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை தினமும் சுத்தம் செய்யவும். இது கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் வராமல் தடுக்கும்.

உப்பு நீர்
கருவளையங்கள் வராமல் இருக்க, முகத்தை தினமும் உப்பு நீரால் சுத்தம் செய்யவும்.

தக்காளி சாறு
தக்காளிச் சாற்றினை முகத்தில் 20 நிமிடங்களுக்கு ஊற வைத்தால், கரும்புள்ளிகளில் இருந்து விடுபடலாம்.

கற்றாழை
கற்றாழைச் சாற்றினை முகம், கன்னங்கள் மற்றும் மூக்கு பகுதிகளில் தடவி ஊற வைத்து கழுவினால், கரும்புள்ளிகளில் இருந்து விடுபடலாம்.



Click it and Unblock the Notifications
