Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
முகப்பரு உங்க அழகை கெடுக்குதா? இந்த ஃபேஸ் பேக்கை வாரம் 2 முறை யூஸ் பண்ணுங்க.. இனிமே வராது..
Skin Care Tips In Tamil: ஒருவரது முக அழகைக் கெடுக்கும் வகையில் பல்வேறு பிரச்சனைகள் ஒருவரது முகத்தில் வரலாம். அதில் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் அதிகம் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் முகப்பரு. இந்த முகப்பருக்களானது ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். முகப்பருக்கள் வந்தால், அது முகத்தின் தோற்றத்தையே கெடுப்பதோடு, சில சமயங்களில் அந்த பருக்கள் வலியையும் உண்டாக்கி வேதனையைத் தரும்.
முகப்பருக்கள் வரக்கூடாதெனில், அதன் மூல காரணத்தை கண்டறிந்து, அதை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். முகப்பருக்கள் வருவதற்கு காரணம், சருமத்தில் எண்ணெய் பசை அதிகமாக சுரப்பதும், கண்ட இடத்தில் தொட்டுவிட்டு முகத்தில் அப்படியே கையை வைப்பதும், அதிக மன அழுத்தம் கொள்வதும், போதுமான நீரை அருந்தாமல் இருப்பதும் ஆகும்.

நீங்கள் இந்த முகப்பரு பிரச்சனையை அடிக்கடி சந்திப்பீர்களா? இதைத் தடுப்பதற்கான வழிகளை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு சில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்கள். கீழே முகப்பருக்களை வரவிடாமல் தடுக்கும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஃபேஸ் பேக்குகளை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
1. கற்றாழை மஞ்சள் ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் சிறிது கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
2. தேன் பட்டை ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 2 டீஸ்பூன் தேன் மற்றும் 1/2 டீஸ்பூன் பட்டை தூளை ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை நன்கு கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவ வேண்டும்.
* பின்பு 10-15 நிமிடம் அப்படியே ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தலாம்.
3. தயிர் மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் ஓட்ஸ் பொடியை சிறிது எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தயிரை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். வேண்டுமானால், இத்துடன் முட்டையின் வெள்ளைக்கருவையும் சேர்த்துக் கொள்ளலாம்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. டீ-ட்ரீ ஆயில் மற்றும் முட்டை வெள்ளைக்கரு ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் சில துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் முழுவதும் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த, நல்ல பலன் கிடைக்கும்.
5. வெந்தய ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 2 டீஸ்பூன் வெந்தயத்தை எடுத்து, அதில் நீரை ஊற்றி, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* பின் அதை மறுநாள் காலையில் அரைத்து, அப்படியே முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* 10-15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த சிறப்பான பலனைப் பெறலாம்.
6. கடலை மாவு, தேன், தயிர் ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை போடுவதன் மூலம் பருக்கள் தடுக்கப்படுவதோடு, முகம் பிரகாசமாகவும், மென்மையாகவும் இருக்கும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த நல்ல மாற்றத்தைக் காணலாம்.



Click it and Unblock the Notifications