Latest Updates
-
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும்
உங்க அக்குள் பகுதி கருப்பா அசிங்கமாக இருக்கா? இந்த சின்ன சின்ன மாற்றங்கள் பழைய கலரை ஈஸியா கொண்டுவருமாம்...!
அக்குள் பகுதி கருமையாக இருப்பது என்பது பல சமயங்களில் சங்கடத்தையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தும். குறிப்பாக ஸ்லீவ் ஆடைகள் அல்லது இரவு நேர ஆடைகள் அணியும் போது அக்குள் பகுதி கருமயங்க இருந்தால் கையைத் தூக்கவே சங்கடமாக இருக்கும்.
அக்குள் பகுதிகளை பராமரிக்க நாம் பெரும்பாலும் ஷேவிங், பாடி வாஷ், மிகவும் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்க டியோடரண்டைப் பயன்படுத்துவது போன்ற எளிய செயல்களை மட்டுமே நாம் செய்கிறோம். ஹைப்பர் பிக்மென்டேஷன், ஹார்மோன் மாற்றங்கள், அதிக வியர்வை, இறுக்கமான ஆடைகளை அணிதல் மற்றும் மோசமான சுகாதாரம் போன்றவற்றால் அக்குள் பகுதி கருமையாகிறது.

அக்குள் கருமையாக இருப்பதற்கு உடல் பருமன் முக்கிய காரணங்களில் ஒன்று என்பது பலரும் அறியாத ஒன்றாகும். உங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு உங்கள் எடையைக் குறைக்க உணவு மற்றும் உடற்பயிற்சி திட்டங்களை உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கவும். உங்கள் அக்குள்களை சரியாக கவனித்துக்கொள்வதன் மூலம், நீங்கள் கரும்புள்ளிகளின் தோற்றத்தைக் குறைக்கலாம் மற்றும் அக்குள் பகுதி கருமையாவதைத் தடுக்கலாம்.
முடி மற்றும் இறந்த செல்களை அகற்ற வேண்டும்
அரிப்பு மற்றும் அதிலிருந்து சரியாக வளராத முடிகள் காரணமாக, அக்குள் பகுதி கருமையாகத் தோன்றும். இந்த சிறிய முடிகளை அகற்ற வேக்சிங் அல்லது வேறு முடி அகற்றும் பொருட்களை பயன்படுத்தி முடிகளை நீக்கலாம்.
இயற்கை டியோடரண்ட்
சில ஆண்டிபெர்ஸ்பிரண்ட்கள் மற்றும் டியோடரண்டுகளில் கடுமையான இரசாயனங்கள் உள்ளன, அவை சருமத்தை மோசமாக்கும் மற்றும் கருமையாக்கும். நறுமணம் மற்றும் இரசாயனங்கள் இல்லாத இயற்கையான டியோடரண்டுகளை பயன்படுத்துவது அக்குள் பகுதியின் நிறத்தை மாற்றலாம்.
சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும்
அக்குள் பகுதியை தூய்மையாகவும் மற்றும் வறட்சியாகவும் பராமரிப்பது கருமையை ஏற்படுத்தும் பாக்டீரியா வளர்ச்சியை நிறுத்தலாம். ஒவ்வொரு நாளும் குளித்தவுடன், உங்கள் அக்குள்களை முழுமையாக நன்றாகத் துடைக்கவும்.
உணவுகள்
சில உணவுகளும் அக்குள் பகுதிகளை கருமையாக்கலாம். உதாரணமாக, காபி மற்றும் காரமான உணவுகள் உங்களுக்கு அதிக வியர்வையை உண்டாக்கும், இது உங்கள் அக்குளை கருமையாக்குகிறது. உங்களால் முடிந்தவரை, இந்த உணவுகளிடமிருந்து விலகி இருங்கள்.
சரியான உடை
இறுக்கமான ஆடைகளால் ஏற்படும் உராய்வு மற்றும் எரிச்சலின் விளைவாக அக்குள் பகுதி கருமையாகலாம். இதைத் தடுக்க நல்ல காற்றோட்டதை அனுமதிக்கக் கூடிய துணியால் தைக்கப்பட்ட வசதியான, தளர்வான ஆடைகளை அணியுங்கள்.
சருமத்தை ஒளிரச் செய்யும் பொருட்கள்
வைட்டமின் சி, கோஜிக் அமிலம் மற்றும் நியாசினமைடு போன்ற பொருட்களைக் கொண்ட பொருட்களைப் பயன்படுத்துவது அக்குள் பகுதியில் இருக்கும் கருமையை போக்க உதவும். மேலும் இந்த ஊட்டச்சத்துக்கள் கொண்ட கிரீம்கள் மற்றும் சீரம்களும் உதவலாம்.



Click it and Unblock the Notifications


