Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
உங்க பற்கள் வெள்ளவெளேர்னு மின்ன ஸ்ட்ராபெரி உதவுமா? அத நீங்க எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
நாம் வாய்விட்டு சிரிக்கும்போது நம் பற்களின் நிறம் நன்றாக வெளிப்படும். இதனாலேயே பலர் தங்கள் மஞ்சள் பற்களை மறைக்க வெளிப்படையாக சிரிப்பதில்லை. பெரும்பாலான மக்கள் வெள்ளை பற்களைப் பெற ராசாயனங்கள் கலந்த பற்பசைகளை கடையில் வாங்கி பயன்படுத்துகிறார்கள். மற்றவர்கள் கறையை ஏற்படுத்தும் உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள்.

பற்களை வெண்மையாக்க இயற்கையான வீட்டு வைத்தியங்களை நீங்கள் தேடுகிறீர்களானால், அதை கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டாம். ஏனெனில், அவை அனைத்தும் வேலை செய்யாது, மேலும் அவை உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கலாம். வாய்வழி ஆரோக்கியத்தைப் பற்றி நாம் பேசும்போது, பற்களை வெண்மையாக்க ஸ்ட்ராபெரி உதவுவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
உங்கள் பற்களை வெண்மையாக்க ஸ்ட்ராபெரி பழத்தின் சில துண்டுகளை எடுத்து உங்கள் பற்களில் தேய்க்க வேண்டும் என்ற இந்த வீட்டு வைத்தியம் உண்மையில் உங்களுக்கு உதவுகிறதா? இல்லையா? என்பதைக் கண்டுபிடிப்போம்.
ஸ்ட்ராபெர்ரிகளின் ஆரோக்கிய நன்மைகள்
வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் ஸ்ட்ராபெரியில் நிறைந்துள்ளதால், அவை நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஆரோக்கியமான கலவைகள் இதில் உள்ளன. மேலும், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்ட்ராபெரி ஃபேஸ் பேக்குகள் உங்கள் சருமத்தில் நன்றாக வேலை செய்து ஜொலிக்க வைக்கும்.
கேடசின், அந்தோசயனின்கள், குர்செடின் மற்றும் கேம்ப்ஃபெரால் போன்ற பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் ஸ்ட்ராபெரியில் உள்ளன. அவை இருதய நோய்களிலிருந்து பாதுகாக்கவும், நல்ல குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும், இரத்த அழுத்தத்தை பராமரிக்கவும் மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
பற்களை வெண்மையாக்க உதவுமா?
ஸ்ட்ராபெர்ரியில் மாலிக் அமிலம் எனப்படும் இயற்கையான வெள்ளையாக்கும் பொருள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆதலால், உங்கள் பற்களை வெண்மையாக்க கணிசமான எண்ணிக்கையிலான ஸ்ட்ராபெர்ரிகளை எடுத்துக்கொள்ளுங்கள். மேலும், இந்த இனிப்பு பழத்தில் உள்ள சர்க்கரை உள்ளடக்கம் பற்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், நீங்கள் அதை அதிகளவில் உட்கொள்ள வேண்டாம்.
உங்கள் பற்களில் மீதமுள்ள சர்க்கரை அல்லது அமிலத்தை அகற்ற, ஸ்ட்ராபெர்ரிகளை சாப்பிட்ட பிறகு தண்ணீரைக் கொண்டு வாயை கொப்பளிக்க வேண்டும் அல்லது உங்கள் பற்களை தேய்த்து கழுவ வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
ஸ்ட்ராபெர்ரியில் உள்ள அமிலம் பற்களை குறைந்தளவு மட்டுமே வெண்மையாக்கும். ஆனால் அவை பற்களை வெண்மையாக்கும் முதன்மையான தீர்வாக நம்பக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். தொடர்ந்து பல் துலக்குதல் மற்றும் ஃப்ளோஸ் செய்தல் போன்ற நல்ல வாய்வழி சுகாதாரப் பழக்கங்களைக் கடைபிடிக்க வேண்டும்.
நிறைய ஸ்ட்ராபெர்ரிகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பற்களை வெண்மையாக்கும் விளைவுகளை அதிகரிக்க, இயற்கையான வெண்மையை தரும் மற்ற பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.
சமையல் சோடா
கூழாக அரைத்த ஸ்ட்ராபெர்ரிகளை சிறிதளவு பேக்கிங் சோடாவுடன் கலந்து, பேஸ்ட்டை உருவாக்கலாம். இந்த இயற்கையான பல் வெண்மையாக்கும் பேஸ்ட்டை நீங்கள் பயன்படுத்தும்போது, உங்கள் பற்கள் வெண்மையாக ஜொலிக்கும். பேக்கிங் சோடா, சிறிது சிராய்ப்பு தன்மை கொண்டது, ஆதலால் பற்களின் மேற்பரப்பில் உள்ள கறைகளை அகற்ற உதவும்.
தேங்காய் எண்ணெய்
இயற்கையாகவே உங்கள் சருமம் மற்றும் முடியை ஈரப்பதமாக்க தேங்காய் எண்ணெய் உதவுகிறது. அந்த வகையில் தேங்காய் எண்ணெயோடு, கூழாக அரைத்த ஸ்ட்ராபெர்ரி பேஸ்ட்டையும் சேர்த்து, இயற்கையான பற்களை வெண்மையாக்கும் மவுத்வாஷை உருவாக்கவும். தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் உள்ளது, இது பிளேக் கட்டமைப்பைக் குறைக்கவும், இறுதியில், வாய்வழி சுகாதாரத்தை மேம்படுத்தவும் உதவும்.
பற்களை வெண்மையாக்க இயற்கை வழிகள்
சிறிதளவு எள் எண்ணெயை உங்கள் வாயில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை தேய்ப்பதால், பற்களில் உள்ள கிருமிகள் மற்றும் பிளேக் அகற்றப்பட்டு, பிரகாசமான பற்களையும் புன்னகையைப் பெறலாம்.
ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் உங்கள் பற்களில் உள்ள கறைகளை போக்க உதவும்.
இருப்பினும், இந்த வீட்டு வைத்தியங்களை எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும் மற்றும் தொழில்முறை பல் பராமரிப்புக்கு மாற்றாக நம்பப்படக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications


