Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
ஆட்டுப்பாலை இந்த வழிகளில் யூஸ் பண்ணுனா உங்க முகம் தேவதை மாதிரி ஜொலிக்குமாம்..விளக்குகிறார் பியூட்டிசியன் தாரணி
ஆட்டுப்பாலில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன என்பது நாம் அறிந்ததே. ஆனால் அவை சருமத்திற்கும் ஏராளமான நன்மைகளை அளிக்கக் கூடியது. ஆட்டுப்பால் சருமத்தில் ஏற்படும் எண்ணெய் பசைக்கு இயற்கையான தடையை போல் சருமத்தின் மீது ஒரு பாதுகாப்பு அடுக்கை ஏற்படுத்துகிறது.
ஆட்டுப்பாலில் இருக்கும் இயற்கையாக கொழுப்புகள் தோலில் அதிக ஈரப்பதம் அல்லது எண்ணெய் பசை இல்லாமல் இருக்க உதவுகிறது. வறண்ட சருமம் முதல் எண்ணெய் பசை வரை உள்ள சருமம் என அனைத்திற்கும் ஆட்டு பால் சிறந்த நன்மைகளை அளிக்கிறது. இவ்வளவு நன்மைகள் கொண்ட ஆட்டுப்பாலை நம் சருமத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்று நமக்கு விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் தாரணி.

கிளென்சர்
தேவையான பொருட்கள்:
ஆட்டுப்பால் - 3 ஸ்பூன்
செய்முறை:
ஆட்டுப்பாலை சிறிதளவு பஞ்சு அல்லது காட்டன் துணியில் நனைத்து முகத்தில் நன்றாக அழுத்தித் துடைக்கவும். இது முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை நீக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. இதை தினசரி இரண்டு முறை பயன்படுத்துவது, சருமத்தில் உள்ள அசுத்தங்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி, மந்தமான சருமத்தை மாற்றி பொலிவை தரும். இதை முகத்தில் மட்டுமின்றி உடல் முழுவதும் கூட பயன்படுத்தலாம்.
ஃபேஸ் மாஸ்க்
தேவையான பொருட்கள்:
ஆட்டுப்பால் - 2 ஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன்
தயிர் - 2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
தயிரை ஒரு துணியில் சேர்த்து முடிந்தவரை தண்ணீர் இல்லாத படி வடித்து கொள்ளவும். பின் அதனுடன், ஆட்டுப்பால், தேங்காய் எண்ணெய், மற்றும் தேனை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதை முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். இதை 15-20 நிம்டங்களுக்கு பின் தண்ணீரால் கழுவவும். இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி, அதிக அளவு நீரேற்றத்துடன் வைக்க உதவுகிறது.
ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
பால் - தேவையான அளவு
ரோஜா பூ - 2
கசகசா - ½ ஸ்பூன்
உளுந்து - 1 ஸ்பூன்
செய்முறை:
கசகசா மற்றும் உளுந்தை இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். பின், நீரை வடித்துவிட்டு அதனுடன் கழுவிய ரோஜா இதழ்களை சேர்த்து கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு பால் சேர்த்து நன்றாக அரைத்து, முகத்தில் தடவு 25-30 நிமிடங்களுக்கு பிறகு கழுவவும். ஆட்டுப்பாலில் லாக்டிக் அமிலத்துடன் சேர்த்து பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இது சரும நிறத்தை மேம்படுத்தி மிளிர செய்கிறது.
குளியல் பொடி
தேவையான பொருட்கள்:
ஆட்டுப்பால் - ¼ கப்
கற்றாழை ஜெல் - 2 ஸ்பூன்
கடலைமாவு அல்லது பாசிப்பருப்பு மாவு - 3 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - ½ ஸ்பூன்
செய்முறை:
ஆட்டுப்பால், கற்றாழை ஜெல், கடலைமாவு அல்லது பாசிப்பருப்பு மாவு, மற்றும் ரோஸ் வாட்டரை நன்றாக கலந்து சோப்பிற்கு பதிலாக உடலில் தேய்த்து குளிக்கலாம். இது உடலில் இருக்கும் தேவையற்ற இறந்த செல்களை நீக்குவதிலும், சூரிய கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்பை சரி செய்யவும் உதவுகிறது.
குளிக்கும் நீர்
ஒரு வாளி தண்ணீரில் சில ஸ்பூன் ஆட்டுப்பாலை சேர்த்து கலந்து குளிக்கவும். இது சருமத்தை இயற்கையாகவே ஈரப்பதமாக்கவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவுவதோடு வயதாக தோற்றத்தை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.



Click it and Unblock the Notifications

