Latest Updates
-
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க.. -
40 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பு - எப்படி? இந்த ஒரு ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்! -
சிங்கப்பூர் வெஜ் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ரைஸ் செஞ்சா இனிமே ஹோட்டல் பக்கமே போகமாட்டிங்க
ஆட்டுப்பாலை வைச்சு உங்க கூந்தலை சினிமா ஹீரோயின் மாதிரி மாத்தலாமாம்.... சொல்கிறார் அழகுக்கலை நிபுணர் தாரணி...!
Hair Care Tips: நமக்கு பெரும்பாலும் பால் என்றவுடன் நினைவுக்கு வருவது பாக்கெட் பால். சிலருக்கு மாட்டுப்பால் மற்றும் தாய்ப்பால் நினைவிற்கு வரும், சிலருக்கு ஆரோக்கிய நன்மை காரணமாக கழுதை பால் கூட நினைவிற்கு வரும். ஆனால், நாம் மறந்து போன அதீத ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கும் பால் தான் ஆட்டு பால்.
ஆட்டு பால் கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின்கள் போன்ற அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களின் வளமான ஆதாரமாக இருக்கிறது. இது நடுத்தரத்தொடர் கொழுப்பு அமிலங்களின் அதிக செறிவைக் கொண்டுள்ளதால், இதய ஆரோக்கியத்திற்கு நன்மையை தருகின்றன.

இதை பசுவின் பாலுடன் ஒப்பிடும்போது, செலினியம் மற்றும் துத்தநாகம் போன்ற சில தாதுக்கள் இதில் அதிக அளவில் நிறைந்திருக்கிறது. இதெல்லாம் தெரிந்ததால்தான் என்னவோ நம் மகாத்மா காந்தி ஆட்டுப்பாலை எப்போது பயன்படுத்தி வந்தார். இதில் மற்ற பாலை காட்டிலும் புரதம் அதிக அளவில் இருக்கிறது.
இந்த காரணங்களால்தான் பெரும்பாலான கூந்தல் ஆரோக்கியப் பொருட்களில் ஆட்டுப்பால் பயன்படுத்தப்படுகிறது. ஆட்டுப்பால் உங்களுக்கு கிடைத்தால் அதை வைத்தே உங்கள் இழந்த கூந்தல் ஆரோக்கியத்தை மீட்கலாம் என்று அழகுக்கலை நிபுணர்களும் கூறுகிறார்கள். இந்த பதிவில் அழகுக்கலை நிபுணர் தாரணி ஆட்டுப்பாலை வைத்து எப்படி கூந்தலை ஆரோக்கியமானதாக என்று நம்முடன் பகிர்ந்துள்ளார்.
ஆட்டு பால் ஷாம்பூ
தேவையான பொருட்கள்:
ஆட்டுப்பால் - 1 கப்
பூந்திக்கொட்டை - 5
வெந்தயம் - ¼ ஸ்பூன்
சீயக்காய் - 5
செய்முறை:
வெந்தயம், சீயக்காய் மற்றும் பூந்தி கொட்டையை முதல் நாள் இரவே ஊறவைத்து விடவும். அடுத்த நாள் காலை நீரை வடித்துவிட்டு, பூந்திக்கொட்டையின் விதைகளை நீக்கி கொள்ளவும். பின் இவற்றை ஆட்டு பால் சேர்த்து நன்றாக அரைத்து, தலைக்கு தேய்த்து குளிக்கவும். இது முடி உதிர்வு, முடி உடைதல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும்.
ஆட்டு பால் ஹேர் மாஸ்க்
தேவையான பொருட்கள்:
ஆட்டுப்பால் - ½ கப்
பாதாம் எண்ணெய் - 1 ஸ்பூன்
ஆமணக்கு எண்ணெய் - 1 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 1 ஸ்பூன்
செய்முறை:
ஆட்டுப்பால், பாதாம் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், மற்றும் ரோஸ் வாட்டரை நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை முடியின் மீது தேய்த்து 20 முதல் 30 நிமிடங்கள் வைத்திருக்கவும். பின், வெதுவெதுப்பான நீரில் அலசவும். ஆட்டுப்பாலில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் கலவையானது மயிர்க்கால்களில் தூண்டுதலை ஏற்படுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. வைட்டமின் பி6 கெரட்டின் உற்பத்திக்கு முக்கிய பங்களிப்பதால், முடி வளர்ச்சிக்கு அத்தியாவசியமாகிறது.
ஆட்டுப்பால் கண்டிஷ்னர்
தேவையான பொருட்கள்:
ஆட்டுப்பால் - ½ கப்
கற்றாழை ஜெல் - 3 ஸ்பூன்
தேங்காய் பால் - 2 ஸ்பூன்
ஆளிவிதை - 1 ஸ்பூன்
செய்முறை:
ஆளிவிதையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்த உடன் எடுத்து ஆற விடவும். மிதமான சூட்டில் இருக்கும் போது, ஒரு மெல்லிய துணியால் வடித்து எடுத்து கொள்ளவும். பின் அதனுடன், ஆட்டுப்பால், கற்றாழை ஜெல், மற்றும் தேங்காய் பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதை நன்றாக முடியில் தேய்த்து, 2-3 நிமிடங்களுக்கு பின் குளிர்ந்த நீரால் அலசவும். தலைமுடி பராமரிப்பில் ஆட்டுப்பாலை தொடர்ந்து பயன்படுத்துவது முடியின் தன்மையை மேம்படுத்தும். அதன் ஈரப்பதமூட்டும் பண்புகள், உதிர்வதைக் கட்டுப்படுத்தவும், பளபளப்பாக்கவும், விரும்பிய ஸ்டைலை செய்து கொள்வதை எளிதாக்கவும் உதவுகிறது.



Click it and Unblock the Notifications

