Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
ஹீரோயின் மாதிரி உங்க முடியை பளபளப்பாகவும் நேராகவும் மாற்ற... இந்த ஹேர் மாஸ்க்குகளை யூஸ் பண்ணா போதுமாம்!
தயிர் வலுவான மற்றும் ஆரோக்கியமான முடிக்கு நன்கு அறியப்பட்ட வீட்டு வைத்தியம். எனவே, நீங்கள் இயற்கையான முறையில் நேரான முடியைப் பெற விரும்பினால், நீங்கள் வாழைப்பழம் மற்றும் தயிரை பயன்படுத்த வேண்டும்.
தலைமுடி நம் தோற்றம் மற்றும் அழகோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. அதனால், எல்லா பெண்களும் பளபளப்பான தலைமுடியோடு அழகாக தோற்றமளிக்க விரும்புவார்கள். தற்போது பெரும்பாலான பெண்கள் தலைமுடியை நேராக்க பியூட்டி பார்லரில் ஸ்ட்ரைட்னிங் செய்கிறார்கள். வெப்ப ஸ்டைலிங் கருவிகள் மூலம் உங்கள் தலைமுடியை சேதப்படுத்துவதை விட, சில நேரடியான சமையலறை பொருட்களால் எளிதாக உங்கள் முடியை நேராக்கலாம். ரசாயனம் கலந்த சிகிச்சையை உங்கள் முடிக்கு அடிக்கடி பயன்படுத்தும்போது, அவை உங்கள் தலைமுடி ஆரோக்கியத்தை முற்றிலும் பாதிக்கும். ஆதலால், இந்த சிகிச்சைகளை விட இயற்கையான வைத்தியங்களை நீங்கள் தேர்வு செய்வது நல்லது.

நீங்கள் மிருதுவான அல்லது நேரான கூந்தலை பெற விரும்புபவராக இருந்தால், பார்லருக்கு செல்வதை தவிர்க்க வேண்டிய நேரம் இது. ஏனெனில், உங்கள் தலைமுடியில் பயன்படுத்த பாதுகாப்பான சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் காணலாம்.

கற்றாழை ஜெல், எலுமிச்சை மற்றும் ஆமணக்கு எண்ணெய்
இந்த மூன்று பொருட்களும் சருமத்திற்கு மட்டுமல்ல, முடிக்கும் நன்மை பயக்கும். கற்றாழை ஜெல், சிறிது எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் ஆமணக்கு எண்ணெய் மற்றும் 2 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை எடுத்து, அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும். அதை தலைமுடியில் தடவி, பின்னர் ஷாம்பு கொண்டு முடியை கழுவவும். எலுமிச்சை சாறு உச்சந்தலையில் வைட்டமின் சி ஊக்கத்தை அளித்து, முடி உதிர்வை குறைக்கும். ஆமணக்கு எண்ணெய் முடி உதிர்வைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் முடியை நேராக்குகிறது. இதனால், உங்கள் முடி நீளமாகவும் நேராகவும் இருக்கும்.

வாழைப்பழம் மற்றும் தேன் ஹேர் பேக்
உங்களுக்கு சேதமடைந்த முடி இருந்தால், வாழைப்பழத்தை பயன்படுத்த வேண்டிய நேரம் இது. இந்த பழத்தில் உங்கள் தலைமுடியை ஹைட்ரேட் செய்யக்கூடிய ஊட்டமளிக்கும் குணங்கள் உள்ளன. வாழைப்பழம் மற்றும் தேன் பேக்குகள் மென்மையான, நேரான மற்றும் பளபளப்பான முடியை உங்களுக்கு தரும். இது தவிர, இது புரதம், பொட்டாசியம், வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் நல்ல மூலமாகும். இவை அனைத்தும் உங்கள் முடி மீண்டும் வளர உதவும். ஒரு வாழைப்பழம், சிறிது தேன், ஒரு கப் தயிர், இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக பிசைந்து ஹேர் மாஸ்க்கை தயாரிக்கவும். இதை உங்கள் தலைமுடியில் தடவிய பிறகு, ஒரு மணி நேரம் கழித்து முடியை ஷாம்பு கொண்டு அலசவும்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் முட்டை ஹேர் மாஸ்க்
ஆலிவ் எண்ணெய் மற்றும் முட்டையை இணைப்பது உங்கள் முடியை நேராக்க உதவும். முட்டையுடன் ஆலிவ் எண்ணெயைக் கலக்கும்போது, அது உடலில் காணப்படும் இயற்கை எண்ணெயைப் போன்றது. இந்த கலவையானது உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்கும், மேலும் உங்கள் தலைமுடி பட்டுப் போலவும் நேராகவும் மாறும். முட்டையில் புரோட்டீன்கள் உள்ளன. அவை கூந்தலுக்கு ஊட்டமளித்து மென்மையாக்க உதவுகின்றன, அதே நேரத்தில் ஆலிவ் எண்ணெய் ஒரு சிறந்த கூந்தல் கண்டிஷனராகும். இந்த ஹேர் பேக்கில் கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளன. இது உங்கள் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உங்கள் தலைமுடியை மென்மையாக்கவும் உதவும்.

வாழைப்பழம் மற்றும் தயிர்
தயிர் வலுவான மற்றும் ஆரோக்கியமான முடிக்கு நன்கு அறியப்பட்ட வீட்டு வைத்தியம். எனவே, நீங்கள் இயற்கையான முறையில் நேரான முடியைப் பெற விரும்பினால், நீங்கள் வாழைப்பழம் மற்றும் தயிரை பயன்படுத்த வேண்டும். இந்த இரண்டு பொருட்களும் நிச்சயமாக உங்கல் முடிக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். வாழைப்பழம் மற்றும் தயிர் கலவையை தலைமுடியில் தடவி சிறிது நேரம் விட்டுவிட்டு, முடியை அலச வேண்டும். இது, உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும் நேராகவும் மாறும். முடியை நேராக்குவதைத் தவிர, இந்த ஹேர் மாஸ்க் உங்கள் உச்சந்தலையைச் சுத்தப்படுத்தவும், இறந்த சரும செல்களை அகற்றவும் மற்றும் முடியின் வளர்ச்சிக்கும் உதவும்.

ஆப்பிள் சைடர் வினிகர் (ACV)
முடியின் pH அளவை ஆப்பிள் சைடர் வினிகர் மீட்டெடுக்கிறது. இது முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது மற்றும் ஊக்குவிக்கிறது. இது உங்கள் தலைமுடியை புத்துயிர் பெறச் செய்து, மென்மையாகவும், பளபளப்பாகவும், மிருதுவாகவும் மாற்ற உதவும். கூடுதலாக, ஆப்பிள் சைடர் வினிகர் உங்கள் முடியை நேராக்குகிறது. ஏனெனில், இது இயற்கையாகவே முடியை நேராக்கும் பண்புகளை கொண்டுள்ளது. மேலும், இது உங்கள் முடி வளர்ச்சிக்கும் உதவும்.

இறுதிக்குறிப்பு
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த இயற்கை வைத்தியங்கள் தற்காலிகமாக உங்கள் முடியை கட்டுப்படுத்தி, நேராக்க உதவுகிறது. இது கெமிக்கல் ஸ்ட்ரைட்னிங் போன்ற பலன்களைத் தருவதில்லை. ஆனால், கெமிக்கல் ஸ்ட்ரைட்னிங் உங்கள் முடியை சேதப்படுத்தும், வலுவிழக்க வைக்கும் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், இயற்கை வைத்தியம் உங்களுக்கு எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. இவற்றை தொடர்ந்து செய்யும் போது, உங்கள் முடி மென்மையாகவும் நேராகவும் மாறும். மேலும், உங்கள் முடியின் ஆரோக்கியமும் மேம்படும்.



Click it and Unblock the Notifications