Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
பீர் குடிக்கு மட்டுமல்ல, முடிக்கும் தான்!!!

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் வழிகள்:
* சமையலில் பயன்படுத்தும் வெங்காயத்தை நன்கு அரைத்து ஜூஸ் பிழிந்து, அந்த சாற்றை சூடேற்றாமல், அப்படியே முடியின் வேர்ப்பகுதிகளில் தடவ வேண்டும். முக்கியமாக இந்த சாற்றை தடவுவதற்கு முன், சூடான தண்ணீரில் நனைத்த துணியை அரை மணிநேரம் தலையில் சுற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் வெங்காயச் சாறு எளிதில் தலையில் இறங்கி கூந்தல் உதிர்வதைத் தடுக்கும்.
* பூண்டை நன்கு நசுக்கி அதிலிருந்து வரும் சாற்றை எடுத்து, கூந்தலின் வேர்ப் பகுதியில் படும்படி தேய்த்தால், தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, கூந்தல் உதிர்வது குறைந்து, கூந்தலும் நன்கு வளரும்.
* பீர் வைத்து கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம் என்று கூறியதும், பீரை வாங்கி அடித்துவிட்டு, பின்னர் கூந்தல் வளரவில்லை என்று கேட்க வேண்டாம். பீரை வைத்து பட்டுப்போன்று கூந்தலை வளர்க்கலாம். அதற்கு வெங்காயச்சாற்றுடன், ஒரு கப் பீர் மற்றும் சிறிது தேங்காய் எண்ணெயை சேர்த்து பேஸ்ட் போல் செய்து, கூந்தலில் தடவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மணிநேரம் கழித்து, ஷாம்பு போட்டு சுத்தமான நீரால் அலச வேண்டும். இவ்வாறு செய்தால் கூந்தல் உதிராமல், பட்டுப் போன்று வளரும்.
* குளிக்கும் போது ஷாம்புவை கப்பில் போட்டு, அதை பீரால் கலந்து தலைக்கு தேய்த்துக் குளித்தால், கூந்தல் ஆரோக்கியமாக வளர்வதோடு, பட்டுப் போல் மின்னும்.
பீர் என்று சொன்னதும் ஆண்கள் பலர் இதை படித்துப் பார்த்திருப்பீர்கள். இந்த முறை பெண்களுக்கு மட்டுமில்லை, ஆண்களுக்கும் தான். ஆகவே பீர் குடிக்கும் போது முற்றிலும் குடித்துவிடாமல், சிறிது கூந்தலுக்கு என்று வைத்து உபயோகித்தால், "ஒரு கல்லில் இரண்டு மாங்காய்" என்பது போல் தான்.



Click it and Unblock the Notifications