Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
உங்க சருமம் பளபளப்பாக மின்ன... உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் பின்பும் இத செய்ய மறந்துடாதீங்க!
நம்முடைய சரும பராமரிப்புக்கு முன்னுரிமை கொடுப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இருப்பினும் நாம் செய்யும் சில சில தவறுகள் நம் சருமத்தை பெருமளவில் பாதிக்கிறது. குறிப்பாக உடற்பயிற்சி செய்த பிறகு நம் சரும பராமரிப்பில் சில விஷயங்களை செய்யக் கூடாது என்கிறார்கள் சரும நிபுணர்கள்.
சில பேர் ஜிம்மிற்கு போய்ட்டு வந்த உடனே அல்லது வொர்க் அவுட் செய்த உடன் பல வகையான க்ரீம்களை பயன்படுத்துவார்கள். ஆனால் அப்படி கனமான க்ரீம்களை பயன்படுத்தக் கூடாது என்கிறார்கள் சரும நிபுணர்கள். இந்த மாதிரி நீங்கள் உடற்பயிற்சி செய்த பிறகும் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் சில வகையான சரும பராமரிப்பை செய்யக் கூடாது அதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

சரும பராமரிப்பு :உடற்பயிற்சிக்கு முன்பு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை :
உடற்பயிற்சிக்கு முன்பு சரும பராமரிப்பு
மேக்கப்பை அகற்ற வேண்டும் : உடற்பயிற்சிக்கு முன்பு மேக்கப் போடுவது உங்களுக்கு முகப்பருக்களை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. எனவே உடற்பயிற்சிக்கு முன்பு சருமத்தில் இருந்து மேக்கப்பை துடைக்க வேண்டும்.
சுத்தப்படுத்துதல் : முதலில் லேசான க்ளீன்சரை பயன்படுத்தி முகத்தை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் சரும துளைகள் அடைபட்டு முகப்பருக்கள் வருவது தடுக்கப்படும்.
நீர்ச்சத்து : உங்கள் சருமத்தின் தேவைக்கேற்ப மென்மையான மாய்ஸ்சரைசர் மற்றும் சன்ஸ்க்ரீனை பயன்படுத்துங்கள். இது உங்கள் சருமத்தை பராமரிக்க உதவுகிறது.
சன்ஸ்க்ரீன் : நீங்கள் வெளியில் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்றால் சூரிய ஒளிக் கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தை காக்க குறைந்தபட்சம் SPF 30 சன்ஸ்க்ரீனை பயன்படுத்துங்கள்.
அதே மாதிரி உடற்பயிற்சி செய்யும் போது நல்ல காட்டன் ஜிம் ஆடைகளை அணியுங்கள். இது உங்கள் சரும பராமரிப்புக்கு உதவுகிறது. வியர்வை, சொறி மற்றும் பூஞ்சை தொற்று போன்றவற்றை போக்க உதவுகிறது.
உடற்பயிற்சிக்கு முன்பு செய்யக் கூடாத சரும பராமரிப்பு
கனமான க்ரீம்கள் : உடற்பயிற்சிக்கு முன்பு கனமான க்ரீம்களை முகத்தில் அப்ளை செய்ய வேண்டாம். ஏனெனில் கனமான க்ரீம்கள் உங்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தலாம் மற்றும் முகத்திற்கு எண்ணெய்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இறந்த செல்களை நீக்குதல்
உடற்பயிற்சிக்கு முன்பு ஸ்க்ரப்பை கொண்டு இறந்த செல்களை நீக்க வேண்டாம். ஏனெனில் இறந்த செல்கள் உங்கள் வியர்வையுடன் கலந்து உங்கள் சருமத்தை எரிச்சலடைய வைக்க வாய்ப்பு உள்ளது.
புதிய சரும பராமரிப்புகள் : வொர்க் அவுட்டுக்கு முன்பு புதிய சரும பராமரிப்பு பொருட்களை தவிர்க்க வேண்டும். எரிச்சல் மற்றும் முகப் பருக்கள் வராத பொருட்களை மட்டும் பயன்படுத்துங்கள்.
உடற்பயிற்சிக்கு பின்பு செய்யக் கூடிய சரும பராமரிப்புகள்
கைகளை கழுவுங்கள் : நீங்கள் உடற்பயிற்சி உபகரணங்களை தொட்டால் உடற்பயிற்சி செய்த பிறகு கைகளை நன்றாக கழுவுங்கள். பாக்டீரியா போன்ற நோய்த்தொற்றுகளை போக்க கைகளை நன்றாக கழுவுவது மிகவும் அவசியம்.
குளித்து விட்டு சுத்தமான ஆடைகளை அணியுங்கள்
உடற்பயிற்சி செய்த பிறகு சுத்தமான ஆடைகளை அணிவது அவசியம். எனவே குளித்து விட்டு சுத்தமான ஆடைகளை அணியுங்கள். இது உங்கள் உடல் துர்நாற்றத்தை குறைக்கிறது மற்றும் தொற்று நோய்களை தடுக்க உதவுகிறது.
ஈரப்பதமூட்டுதல் : உங்கள் சருமம் நீரேற்றமாக இருக்க உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதியை மாய்ஸ்சரைசர் கொண்டு ஈரப்பதமாக்குங்கள்.
தண்ணீர் குடியுங்கள் :.
உடற்பயிற்சிக்கு பிறகு நிறைய தண்ணீர் குடிப்பது உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. உங்கள் சருமம் சிவப்பாக எரிச்சலுடன் இருந்தாலோ அல்லது வீக்கத்தைக் குறைக்க நிறைய தண்ணீர் குடியுங்கள்.
சன்ஸ்க்ரீன் :
உங்கள் சருமத்தை சூரிய ஒளிக் கதிர்களில் இருந்து பாதுகாக்க சன்ஸ்க்ரீன் உதவுகிறது. எனவே நீங்கள் வெளியே செல்லும் போது சன்ஸ்க்ரீனை பயன்படுத்த மறக்காதீர்கள். உங்கள் சருமத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது.
உடற்பயிற்சி செய்த பிறகு செய்யக் கூடாத சரும பராமரிப்புகள்
முகத்தை தொடக் கூடாது : உடற்பயிற்சி செய்த பிறகு கைகளால் உங்கள் முகத்தை தொடக் கூடாது. ஏனெனில் உங்கள் கைகளில் உள்ள வேர்வை முகத்தில் பட்டு பருக்கள் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
கனமான மேக்கப் வேண்டாம்
உடற்பயிற்சி செய்து முடித்த உடனே கனமான மேக்கப்பை போடாதீர்கள். கனமான மேக்கப் போட்டால் சரும துளைகள் அடைபட வாய்ப்பு உள்ளது. உங்கள் சருமம் சிறிது நேரம் சுவாசிக்கட்டும்.
சுத்தப்படுத்த வேண்டாம்
உடற்பயிற்சிக்கு பிறகு உடனே முகத்தை சோப்பைக் கொண்டு சுத்தம் செய்யாதீர்கள். ஏனெனில் தோலில் எஞ்சி இருக்கும் வியர்வைகள் பருக்களை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.



Click it and Unblock the Notifications
