Latest Updates
-
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
கடகத்தில் குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க
முகம், கை, கால்களில் வளரும் முடியைப் போக்கும் ஓர் எளிய இயற்கை வழி!
இங்கு முகம், கை, கால்களில் வளரும் முடியைப் போக்கும் ஓர் எளிய இயற்கை வழி கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது முகம், கை, கால்கள் மட்டுமின்றி, உடலின் இதர பகுதிகளிலும் வளரும் முடியைப் போக்குவது ஃபேஷனாகிவிட்டது. சருமத்தை மென்மையாக பட்டுப் போன்று வைத்துக் கொள்ள, பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் வேக்ஸிங் செய்கிறார்கள். ஆனால் இந்த முறையால் கடுமையான வலியை அனுபவிக்கக்கூடும்.

வலி இல்லாமல், பணம் அதிகம் செலவழிக்காமல் மிகவும் எளிய முறையில் உடலில் வளரும் தேவையற்ற முடிகளைப் போக்கும் ஓர் அற்புத இயற்கை வழி குறித்து தமிழ் போல்ட் ஸ்கை கீழே கொடுத்துள்ளது.
அதைப் படித்து பின்பற்றினால், சருமத்தில் உள்ள ரோமங்கள் நீங்குவதோடு, இறந்த செல்களும் நீங்கி, சருமம் பொலிவோடும் மென்மையாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
கற்றாழை ஜெல் - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை #1
முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, சர்க்கரை பவுடர் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும்.

செய்முறை #2
பின்பு அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

செய்முறை #3
பிறகு தயாரித்து வைத்துள்ள கலவையை முடியுள்ள பகுதியில் தடவி, அதன் மேல் காட்டனை வைக்க வேண்டும். இப்படி ஒரு 2-3 லேயர் போட வேண்டும்.

செய்முறை #4
பின் 30 நிமிடம் கழித்து, நன்கு காய்ந்த பின் உரித்து எடுக்க வேண்டும். இப்படி செய்வதால், முடி நீங்குவதோடு, அப்பகுதியும் பளிச்சென்று இருக்கும்.



Click it and Unblock the Notifications
