Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
இந்த 4 ராசிக்காரங்க பெரிய தூங்கு மூஞ்சியாக இருப்பார்களாம்... இவங்களுக்கு உலகத்திலேயே பிடிச்சது தூக்கம்தான்...!
சில ராசிக்காரர்கள் எப்போதும் தேனீ போல சுறுசுறுப்பாக இருப்பார்கள். சிலர் இதற்கு முற்றிலும் எதிர்மறையாக எப்போதும் தூங்கிவழிந்துக் கொண்டே இருப்பார்கள். சிலர் ஏன் எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கிறார்கள் என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்து உள்ளீர்களா? அதற்கு அவர்களின் பிறந்த ராசி காரணமாக இருக்கலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் தூங்குவதற்கு எந்த இடமாக இருந்தாலும் எப்போதும் தயாராக இருப்பார்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் அனைத்தையும் விட தூக்கமே முக்கியமானதாக இருக்கும். தூக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் ஆறுதல் மற்றும் ஆடம்பரத்தை அதிகம் விரும்புகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நிம்மதியைக் கொடுக்கும் விஷயத்தை விரும்புகிறார்கள், அதில் ஒரு நல்ல இரவு தூக்கமும் அடங்கும். சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்கள் ஓய்வை விரும்புகிறார்கள், அவர்கள் வேலையில்லாமல் இருக்கும் நேரமெல்லாம் படுக்கையிலேயே கிடப்பதை நாம் பார்க்கலாம்.
அவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள், ஆனால் அவர்களின் ஆற்றல் விரைவாகக் குறைந்து, ஓய்வு மற்றும் புத்துணர்ச்சிக்காக ஏங்குவார்கள். ரிஷப ராசிக்காரர்களுக்கு, ஒரு தூக்கம் என்பது வெறும் ஆடம்பரம் மட்டுமல்ல, அவர்களின் பேட்டரிகளை ரீசார்ஜ் செய்யும் விஷயமாகும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் கனவுலகத்திற்கும், நிஜ உலகத்திற்கும் இடையில் போராடுகிறார்கள். அவர்கள் சக்திவாய்ந்த உள்ளுணர்வு கொண்டவர்கள் மற்றும் அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். அவர்கள் எப்போதும் மிகவும் சோர்வாக காணப்படுவார்கள். அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்களிலிருந்து தப்பிக்க, மீன ராசிக்காரர்கள் பெரும்பாலும் தூக்கத்தில் மூழ்கிவிடுவார்கள்.
மீன ராசிக்காரர்களுக்கு தூக்கம் ஒரு சரணாலயம் போன்றது, இது அவர்களின் நுட்பமான சமநிலையை பராமரிக்க தேவையான மன மற்றும் உணர்ச்சி ஓய்வை வழங்குகிறது. அடிக்கடி தூங்கிக்கொண்டிருக்கும் மீன ராசிக்காரர்களை நீங்கள் கண்டால் ஆச்சரியப்பட வேண்டாம், அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பது.
கடகம்
அனைவரின் மீதும் அன்பாக இருக்கும் கடக ராசிக்காரர்கள் சந்திரனால் ஆளப்படுகிறார்கள், இது அவர்களின் மனநிலையையும் ஆற்றல் மட்டங்களையும் பாதிக்கிறது. கடக ராசிக்காரர்கள் தங்கள் அக்கறை மற்றும் பச்சாதாப இயல்புக்கு பெயர் பெற்றவர்கள், பெரும்பாலும் மற்றவர்களின் தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இந்த தன்னலமற்ற தன்மை உணர்ச்சிரீதியான சோர்வுக்கு வழிவகுக்கும், எனவே தூக்கம் அவர்கள் வாழ்க்கையின் ஒரு ஒரு முக்கிய பகுதியாக மாறுகிறது.
கடக ராசிக்காரர்களுக்கு உலகிலேயே மிகவும் பிடித்த இடம் அவர்களின் வீடுதான். அங்கு அவர்கள் ஓய்வெடுக்கவும், வாழ்க்கையின் துயரங்களிலிருந்து மீளவும் முடியும். தூக்கத்தின் மீதான அவர்களின் அன்பு உடல்ரீதியான ஓய்வைப் பற்றியது மட்டுமல்ல, உணர்வுரீதியான குணப்படுத்துதலையும் பற்றியது.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் சமநிலையைக் கடைபிடிக்கிறார்கள். அவர்கள் எப்போதும் ஏதாவது வேலையை செய்து கொண்டே இருப்பார்கள், ஆனால் இது அவர்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். துலாம் ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வின் சமநிலையை பராமரிக்க அவர்களுக்கு வழக்கத்தை விட அதிக ஓய்வு தேவை.
சுக்கிரனால் ஆளப்படும் அவர்கள், ஆறுதல் மற்றும் ஆடம்பரத்தின் மீது மிகுந்த நாட்டம் கொண்டவர்கள், அவர்களுக்கு உலகிலேயே மிகவும் பிடித்த இடம் அவர்களின் படுக்கைதான். துலாம் ராசிக்காரர்களுக்கு, குழப்பமான உலகில் மன அமைதியைப் பேணுவதற்கும், சமநிலையை மீட்டெடுப்பதற்கும் அவர்களுக்கு தூக்கம் அவசியம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
