Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
2025-ல் உருவாகும் முதல் மாளவ்ய ராஜயோகம்: ஜனவரி இறுதியில் இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழபோறாங்க..
Venus Transit Make Malavya Rajyog On 28 January 2025: வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.
இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இவர் மாதம் ஒருமுறை தனது நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி, ஒருவரின் நிதி நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவார். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் நுழைந்துள்ளோம். இந்த ஆண்டின் முதல் மாதத்திலேயே பல்வேறு யோகங்கள் உருவாகின்றன.

அதுவும் ஜனவரி 28 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசிக்குள் நுழைந்து, மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, வாழ்க்கை செழிக்கப் போகிறது. மேலும் பணிபுரிபவர்களுக்கு நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இப்போது மாளவ்ய ராஜயோகத்தால் நிறைய நற்பலன்களைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மாளவ்ய ராஜயோகம்
ஜோதிடத்தில் மாளவ்ய ராஜயோகமானது மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. இந்த ராஜயோகமானது சுக்கிரன் சொந்த ராசியான ரிஷபம் மற்றும் துலாம் ராசியிலும், கேந்திர வீடுகளிலும் இருக்கும் போது உருவாகிறது. மாளவ்ய ராஜயோகம் உருவாவதால், ஒருவர் செல்வம், மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அனைத்து வகையான ஆடம்பரங்களையும் பெறுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பொருள் வசதிகள் அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம், வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். சமூகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். பேச்சால் பல காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திடீர் பணம் தேடி வரும். இதன் மூலம் பணக்காரராகும் வாய்ப்புள்ளது. சுக்கிரனின் ஆசியால் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
