Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்...
Venus Transit In Sadayam Nakshatra 2026: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். இப்படிப்பட்ட சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார்.
அப்படி சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், அதன் தாக்கம் ஒருவரது நிதி நிலை, காதல் வாழ்க்கை போன்றவற்றில் காணப்படும். தற்போது சுக்கிரன் சனி பகவானின் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். மேலும் பிப்ரவரி 11 ஆம் தேதி சுக்கிரன் நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது சுக்கிரன் ராகுவின் சதயம் நட்சத்திரத்திற்கு செல்கிறார்.

சுக்கிரன் ராகுவின் நட்சத்திரத்திற்கு செல்வதால் அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது ராகுவின் சதயம் நட்சத்திரத்திற்கு சுக்கிரன் செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இருப்பினும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகிறது. இதன் விளைவாக முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். தொழில் ரீதியாக சில நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சுக்கிரன் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். காதல் வாழ்க்கை மேம்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வேலையை தொடங்கினால் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இந்நிலையில் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்கள் ஒவ்வொன்றும் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். மன அழுத்தம் குறையும். வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆனால் சொந்த தேவைக்காக சற்று அதிகமாக செலவு செய்வீர்கள். இருப்பினும் சுக்கிரனின் அருளால் பண வரவு சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


