Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதம் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பணத்தை சம்பாதிப்பாங்க...
Sun Rahu Conjunction In Aquarius 2026: வேத ஜோதிடத்தின் படி கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது சூரியன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். அதே சமயம் நிழல் கிரகமாக கருதப்படுபவர் ராகு.
இந்த ராகு மற்ற கிரகங்களைப் போன்று நேர்கதியில் பயணிக்காமல், பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கக்கூடியவர். மேலும் இந்த ராகு ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். தற்போது ராகு சனி பகவானின் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இதனால் கும்பத்தில் சூரியன் மற்றும் ராகுவின் சேர்க்கை உருவாகியுள்ளது.

இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை அவ்வளவு சிறப்பானதாக இல்லாவிட்டலும், சில ராசிக்காரர்கள் இந்த ராகு சூரியனின் சேர்க்கையால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். அதுவும் இந்த ராகு சூரியனின் சேர்க்கையானது மார்ச் மாதம் வரை நீடித்திருப்பதால், அடுத்த ஒரு மாத காலம் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் ராகு சூரியனின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் நிதி நிலைமை வலுவடையும். செலவுகள் குறையும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுகூர்கள். வணிகர்களுக்கும் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணியிடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் ராகு சூரியனின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். செலவுகள் கட்டுக்குள் வரும். கடன் குறையும். புதிய தொழிலை தொடங்குவதற்கு இக்காலம் சிறந்ததாக இருக்கும். முதலீடுகளை செய்தால், நல்ல லாபத்தைப் பெறலாம். உடல் சோர்வு, மன கவலையில் இருந்து விடுதலை கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குழந்தைகளால் சந்தோஷப்படுவீர்கள்.
தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். இந்த நட்பால் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு இக்காலத்தில் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். திடீரென்று கையில் பணம் குவியும். வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணப் பிரச்சனைகள் தீரும். ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, உடல் நலம் மேம்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
