Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
18 ஆண்டுகள் கழித்து கும்பத்தில் ஒன்றிணையும் ராகு-சுக்கிரன்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்..
Rahu Venus Conjunction 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதுடன், அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து பயணிக்கும். அதில் சில கிரக சேர்க்கையானது பல ஆண்டுகளுக்கு பின் நிகழும்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் ராகுவும் சுக்கிரனும் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர். அதுவும் சனி பகவானின் கும்ப ராசியில் இந்த சேர்க்கை நிகழவுள்ளது. இதில் ஏற்கனவே நிழல் கிரகமான ராகு கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் பிப்ரவரி 06 ஆம் தேதி கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் பிப்ரவரி 06 முதல் கும்பத்தில் ராகு-சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையானது சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது. இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அதில் சில ராசிக்காரர்கள் இந்த சேர்க்கையால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது 18 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் ஒன்றிணையும் ராகு-சுக்கிர சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் ராகு-சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் புதிய வணிக ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருப்பவர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்திருந்தால், நல்ல பலனைப் பெறக்கூடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் ராகு சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் வசதிகளைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். மாமியார், மாமனாருடனான உறவு வலுவாக இருக்கும். தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். பல புதிய வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் ராகு சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத அளவில் செல்வத்தைப் பெறுவார்கள். பேச்சால் பல காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் சிக்கிய பணத்தைப் பெறுவார்கள். பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications