Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
1 வருடம் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Sun Mercury Make Budhaditya Rajyog In Leo On 17 August 2025: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார். கிரகங்களில் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். தற்போது இவர் கடக ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் சூரியன் ஆகஸ்ட் 17 ஆம் தேதி தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த சிம்ம ராசிக்கு சூரியன் 1 வருடம் கழித்து செல்லவுள்ளார். இதனால் இந்த சூரிய பெயர்ச்சியானது சற்று சிறப்பானது மற்றும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சற்று சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்நிலையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் ஆகஸ்ட் 30 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் சிம்ம ராசியில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த சக்தி வாய்ந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இதன் விளைவாக தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளது. இப்போது 1 வருடம் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் சக்தி வாய்ந்த புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். இதன் மூலம் தேர்வுகளில் சிறப்பான பலன்களைப் பெறக்கூடும். உயர் கல்வி படிக்க விரும்பும் மாணவர்களின் ஆசைகளும் நிறைவேறும்.
பணியிடத்தில் செயல்திறன் மேம்படும். இதனால் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு பயணங்களால் பெரிய அளவில் ஒரு ஜாக்பாட் அடிக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் செயல்திறன் மேம்படும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான முழு பலனும் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும். நிதி ரீதியாகவும் இக்காலம் சிறப்பாக இருக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். எதிர்பாராத நிதி ஆதாயங்களையும் பெற வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புள்ளது.
தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். இது எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் வகையில் இருக்கும். பங்கு சந்தை, லாட்டரி மூலம் நிறைய லாபத்தை ஈட்டுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அரசு வேலை செய்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். முக்கியமாக வெற்றிகள் குவியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications