Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
1 வருடம் கழித்து விருச்சிகத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு...
Budhaditya Rajyoga In Scorpio On November 2024: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் அக்டோபர் 29 ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழைந்தார்.
இந்நிலையில் நவம்பர் 17 ஆம் தேதி கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் விருச்சிக ராசியில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் உருவாகக்கூடியது தான் புதாதித்ய ராஜயோகம்.

இந்த ராஜயோகத்தால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். மேலும் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். இப்படிப்பட்ட ராஜயோகம் விருச்சிக ராசியில் உருவாகும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருந்தால், விரும்பிய வேலை தேடி வரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். எதிர்காலத்தில் நல்ல ஆதாயத்தைத் தரும்படியான புதிய நட்பு கிடைக்கும். உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்
மகர ராசியின் 11 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகள் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். நிதி நிலையில் உயர்வு ஏற்படும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகள் தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றின் மூலம் நிறைய லாபத்தைப் பெறுவீர்கள்.
கும்பம்
கும்ப ராசியின் 10 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருந்தால், எதிர்பார்த்த வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். வியாபாரத்தை விரிவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இக்காலத்தில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். இக்காலத்தில் மேற்கொள்ளும் எந்த வேலையும் எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











