Latest Updates
-
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
50 ஆண்டுகளுக்கு பின் தீபாவளி அன்று சூரியன், செவ்வாயின் அபூர்வ நிலை: அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்!
Sun, Mars In Weak State On Diwali 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் சில கிரகங்கள் சில ராசிகளில் பலமாகவும், சில ராசிகளில் பலவீனமாகவும் இருக்கும். அதற்கேற்பவும் கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது பலன்கள் கிடைக்கும்.
அந்த வகையில் அக்டோபர் 17 ஆம் தேதி கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் துலாம் ராசிக்குள் நுழைந்தார். துலாம் ராசியில் சூரியன் பலவீனமாக இருப்பார். அதே சமயம், கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் அக்டோபர் 20 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழையவுள்ளார். கடக ராசியில் செவ்வாய் வலுவிழந்து இருப்பார்.

இவ்விரு கிரகங்களும் நட்பு கிரகங்களாகும். இந்த இரண்டு கிரகங்களும் சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் ஒன்றாக வலுவிழந்து உள்ளன. அதுவும் இந்த ஆண்டின் தீபாவளி நாளில் இந்நிலையில் இவ்விரு கிரகங்களும் வலுவிழந்து இருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இதன் விளைவாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டில் செவ்வாயும், 5 ஆவது வீட்டில் சூரியனும் இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். உஙகளின் பேச்சு மற்றவர்கள் மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். திறமையால் பணியிடத்தில் உள்ளோரை ஈர்ப்பீர்கள். காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும்.
மேஷம்
மேஷ ராசியின் 7 ஆவது வீட்டில் சூரியனும், 4 ஆவது வீட்டில் செவ்வாயும் இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். வசதிகள் அதிகரிக்கும். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். தாயுடனான உறவு வலுவாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டில் செவ்வாயும், 6 ஆவது வீட்டில் சூரியனும் இருப்பதால், இந்த ராசிக்காரர்களின் தைரியம் அதிகரிக்கும். ரகசிய எதிரிகளை திறமையால் கண்டறிந்து வீழ்த்துவீர்கள். தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். உங்களின் பேச்சு மற்றவர்களின் மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். பேச்சால் பலரை ஈர்ப்பீர்கள். நீண்ட நாட்களால் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தால், அதில் நல்ல வெற்றி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
