Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
Solar Eclipse 2026: ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.. எந்த ராசிக்கு சூப்பராவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
Solar Eclipse 2026: ஜோதிடத்தின் படி, கிரகணம் என்பது ஒரு முக்கியமான வான நிகழ்வு. ஒரு ஆண்டில் 4 கிரகணங்கள் நிகழும். அதில் 2 சூரிய கிரகணமும், 2 சந்திர கிரகணமும் ஆகும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி 17 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்நாளில் தான் மாசி மாத அமாவாசை வருகிறது.
இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி, பிற்பகல் 3:26 மணிக்கு தொடங்கி மாலை 7:57 மணிக்கு முடிவடையும். இந்த சூரிய கிரகணம் சனி பகவானால் ஆளப்படும் கும்ப ராசியில் நிகழ்கிறது. முக்கியமாக இது ஒரு வளைய சூரிய கிரகணமாக இருக்கும் மற்றும் இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இந்த சூரிய கிரகணத்தின் போது சூரியன் 'நெருப்பு வளையம்' போன்று காட்சியளிக்கும்.

ஆனால் இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. இதனால் இந்தியாவில் சூதக் காலம் செல்லாது. ஆயினும், கிரகங்களின் நிலை காரணமாக, சூரிய கிரகணத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் மீதும் காணப்படும். அதில் சிலருக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது 2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
சூரிய கிரகணத்தின் போது மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சூரியன் இருப்பார். இதனால் இந்த கிரகணம் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். மேலும் நிதி நிலையிலும் எதிர்பாராத அளவில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.
ரிஷபம்
சூரிய கிரகணத்தின் போது ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சூரியன் இருப்பார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும். பணியிடத்திலும் வேலைப்பளு அதிகரிக்கும். கிரகண நாளில் முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தினருடன் ஒருங்கிணைப்பை பேண வேண்டும்.
மிதுனம்
சூரிய கிரகணத்தின் போது மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சூரியன் இருப்பார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். இப்படி செலவு அதிகரிப்பதால் நிதி நிலை பாதிக்கப்படும். அதுவும் உடல்நலம் தொடர்பான விஷயங்களுக்கு செலவுகள் அதிகம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
கடகம்
சூரிய கிரகணத்தின் போது கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சூரியன் இருப்பார். இதனால் பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும். தடைபட்ட வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியுடன், மன திருப்தியையும் பெறுவீர்கள்.
சிம்மம்
சூரிய கிரகணத்தின் போது சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சூரியன் இருப்பார். இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த ஒரு புதிய வேலையையும் செய்யும் போது சிறப்பு கவனத்தை செலுத்த வேண்டும். கூட்டு தொழில் செய்பவர்கள் சர்ச்சைகளில் சிக்கக்கூடும். இக்காலத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.
கன்னி
சூரிய கிரகணத்தின் போது கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சூரியன் இருப்பார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். பணியிடத்தில் முன்னேற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.
துலாம்
சூரிய கிரகணத்தின் போது துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சூரியன் இருப்பார். இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். சமூகத்தில் உங்களின் வார்த்தை மக்களின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். காதல் உறவுகள் வலுவடையும், சமூகத்தில் மதிப்பு, மரியாதையுடன் கௌரவமும் அதிகரிக்கும்.
விருச்சிகம்
சூரிய கிரகணத்தின் போது விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சூரியன் இருப்பார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தன்னம்பிக்கை வழக்கத்தை விட அதிகரிக்கும். இக்காலத்தில் உங்களுக்கு புதிய நபரின் நட்பு கிடைக்கும்.
தனுசு
சூரிய கிரகணத்தின் போது தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் சூரியன் இருப்பார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு லாபங்கள் குவியும். தொழிலில் வெற்றியும், தொழிலை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களும் கிடைக்கும். பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வேலை தொடர்பான சிரமங்களை அதிகம் சந்திக்க நேரிடும்.
மகரம்
சூரிய கிரகணத்தின் போது மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சூரியன் இருப்பார். இதன் காரணமாக முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தெரியும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
கும்பம்
சூரிய கிரகணத்தின் போது கும்ப ராசியின் முதல் வீட்டில் சூரியன் இருப்பார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். குடும்ப பிரச்சனைகளால் அதிமாக சிரமப்பட நேரிடும்.
மீனம்
சூரிய கிரகணத்தின் போது மீன ராசியின் 12 ஆவது வீட்டில் சூரியன் இருப்பார். இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். குடும்பத்தில் திடீர் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால் காதல் வாழ்க்கையில் சிறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











