Latest Updates
-
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? பூமியின் எல்லைக்கு அப்பால் என்ன உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க பழைய காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
சூரிய கிரகண நாளில் நிகழும் சந்திரனின் இரட்டை பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
Solar Eclipse 2026: இந்த ஆண்டின் முதல் சூரிய பெயர்ச்சி பிப்ரவரி 17 ஆம் தேதி நிகழவுள்ளது. அதுவும் இந்த கிரகணமானது இந்திய நேரப்படி மதியம் 3.26 மணிக்கு தொடங்கி இரவு 7.57 மணிக்கு முடிவடைகிறது. இப்படிப்பட்ட சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. ஆகவே இதன் சூதக் காலம் எதுவும் இல்லை. இதனால் எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இருக்கும்.
இருப்பினும், ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகணங்களானது ஒரு சிறப்பான வானியல் நிகழ்வுகளாக கருதப்படுகின்றன. அதுவும் 2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தின் போது மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் இரண்டு முறை நிலையை மாற்றவுள்ளார். அதில் காலையில் கும்ப ராசிக்குள் நுழையும் சந்திரன், இரவு சதயம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இப்படி ஒரே நாளில் அடுத்தடுத்து ராசியையும், நட்சத்திரத்தையும் மாற்றும் சந்திரனின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

முக்கியமாக இந்த இரட்டை பெயர்ச்சியால் மன நிலை, குடும்பச் சூழல் மற்றும் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவதாக நம்பப்படுகிறது. குறிப்பாக 3 ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளில் நடக்கும் இரட்டை சந்திர பெயர்ச்சியால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
சூரிய கிரகண நாளில் நடக்கும் சந்திரனின் இரட்டை பெயர்ச்சியால், மேஷ ராசிக்காரர்கள் சற்று அமைதியற்றவர்களாக உணரலாம். சிறு விஷங்களுக்கு கூட அதிகமாக பதட்டமடைவீர்கள். வேலைப்பளு அதிகரிக்கும். உடல் சோர்வு தினசரி வேலையை செய்ய முடியாமல் பலவீனமாக்கும். ஆகவே ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். திருமணமானவர்கள் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்து, பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
துலாம்
சூரிய கிரகண நாளில் நடக்கும் சந்திரனின் இரட்டை பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் உணர்ச்சி ரீதியாக ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். குடும்பத்திற்குள் சண்டை அதிகரிக்கும். எந்த ஒரு பிரச்சனையையும் அமைதியாக கையளாக வேண்டும். பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. எந்த ஒரு பெரிய முதலீடுகளையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
கும்பம்
சூரிய கிரகண நாளில் நடக்கும் சந்திரனின் இரட்டை பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனைகளைப் புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும். செரிமான பிரச்சனைகள் தலைத்தூக்கும். எனவே உண்ணும் உணவில் வழக்கத்தை விட அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. எதிர்பார்த்த நிதி ஆதாயங்கள் கிடைக்காமல் போகலாம். மொத்தத்தில் இக்காலத்தில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


