Latest Updates
-
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..
சதயம் நட்சத்திரத்தில் உருவாகும் மங்களாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது...
Mangaladitya Rajyog In Sadayam Nakshatra 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, நட்சத்திரத்தையும் மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் அந்த வகையில் மார்ச் மாத தொடக்கத்தில் ஒரு அற்புதமான கிரக சேர்க்கை நிகழவுள்ளது. அதுவும் ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் இந்த சேர்க்கை நிகழவுள்ளது.
கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் பிப்ரவரி 19 ஆம் தேதி சதயம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். அதைத் தொடர்ந்து மார்ச் 03 ஆம் தேதி கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் சதயம் நட்சத்திரத்திற்கு நுழைவுள்ளார். இதனால் சதயம் நட்சத்திரத்தில் சூரியன் மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் மங்களாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

ஜோதிடத்தின் படி, இந்த ராஜயோகம் செல்வம், வெற்றியைத் தரும். இப்படி உருவாகும் ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 5 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது மார்ச் மாதத்தில் உருவாகும் மங்களாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
மங்களாதித்ய ராஜயோகத்தால் சிம்ம ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு இந்த யோகத்தால் நல்ல பதவி கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மேஷம்
மங்களாத்திய ராஜயோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
மகரம்
மங்களாதித்ய ராஜயோகத்தால் மகர ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகிறது. மேலும் ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
துலாம்
மங்களாதித்ய ராஜயோகத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக சிறப்பான மாற்றங்களைக் காண்பீர்கள். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்
மங்களாதித்ய ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகிறது. மேலும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். முதலீடுகளை செய்யும் எண்ணம் இருந்தால், இந்த யோக காலத்தில் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
















