Latest Updates
-
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ? -
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா?
30 ஆண்டு கழித்து உருவாகவுள்ள அர்த்த கேந்திர யோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
Ardha Kendra Yog On 28 January 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் ஒழுக்கம், நீதி, நேர்மை ஆகியவற்றின் காரணியாவார். நவகிரகங்களிலேயே சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். அதோடு அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். சனி பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கம் தெரியும்.
தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த சனி பகவான் சுக்கிரனுடன் சேர்ந்து அர்த்த கேந்திர யோகத்தை உருவாக்கவுள்ளார். இந்த யோகமானது ஜனவரி 28 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த யோகத்தின் போது சனியும், சுக்கிரனும் ஒருவருக்கொருவர் 45 டிகிரியில் இருப்பார்கள்.

இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் இந்த யோகமானது சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தெரிந்தாலும், 3 ராசிக்காரர்கள் மகத்தான நன்மைகளைப் பெறவுள்ளனர். இப்போது சனி சுக்கிரனால் உருவாகும் அர்த்த கேந்திர யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
அர்த்த கேந்திர யோகத்தால் மீன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
தன்னம்பிக்கையால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம். வியாபாரிகள் கலவையான பலன்களைப் பெறுவார்கள்.
புதிய தொழிலை தொடங்க இக்காலம் சிறந்ததாக இருக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இதனால் நிதி நிலைமை வலுவடையும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும். உறவுகள் வலுவடையும்.
மகரம்
அர்த்த கேந்திர யோகத்தால் மகர ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நிறைய ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில் ரீதியாக நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்புக்கள் தேடி வரும்.
பணியிடத்தில் உங்களின் செயல்திறன் மற்றும் அர்ப்பணிப்பு உயர்அதிகாரிகளிடம் நல்ல பெயரையும், மரியாதையையும் பெற்று தரும். வசதிகளும் ஆடம்பரங்களும் அதிகரிக்கும். வணிகத்தில் நல்ல லாபத்தைப் பெறக்கூடும். வர்த்தகர்கள் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள்.
பல புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் நிதி நிலை நன்றாக இருக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கயும், சேமிக்கவும் முடியும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
அர்த்த கேந்திர யோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். வேலை தொடர்பாகவோ அல்லது நண்பர்கள், குடும்பத்தினருடனோ வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் தேடி வரும். பெரிய அளவு வெற்றியை காண்பீர்கள்.
தொழில் ரீதியாக பல புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும். சிலருக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள்.
நிதி நிலைமை வலுவடையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீண்ட கால பிரச்சனைகள் படிப்படியாக குறையும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான நெருக்கம் அதிகரிக்கும். பயணங்களையும் மேற்கொள்ளலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
