Latest Updates
-
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
சனிப்பெயர்ச்சி நாளில் நிகழும் சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது...
Saturn Transit On Solar Eclipse 2025: வேத ஜோதிடத்தில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருபவர் நீதிமான் தான் சனி பகவான். இந்த சனி பகவான் ஒருவரது வாழ்க்கையில் நீண்ட காலம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர். பாரபட்சம் பாராமல் ஒருவரது கர்மத்திற்கு ஏற்ற பலன்களைத் தரும் சனி பகவான், தற்போது தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் 2 1/2 ஆண்டுகளுக்கு பின் சனி பகவான் ராசியை மாற்றவுள்ளார். அதுவும் மார்ச் 29 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து வெளியேறி மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த குரு பகவானின் ராசிக்கு சனி பகவான் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதுவும் இந்த சனிப் பெயர்ச்சி நாளில் தான் 2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணத்தின் போது சூரியனும் மீன ராசியில் தான் இருப்பார். இப்படி மீன ராசியில் சனி பெயர்ச்சியும், சூரிய கிரகணமும் நிகழ்வதால், இந்நிகழ்வு சற்று சிறப்பானதாக கருதப்படுகிறது.
இப்படியான நிகழ்வின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த நிகழ்வினால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறவுள்ளனர். இதன் மூலம் நல்ல நிதி ஆதாயமும், வெற்றிகளும் குவியப் போகிறது. இப்போது சனி பெயர்ச்சி நாளில் நிகழும் சூரிய கிரகணத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சனி பெயர்ச்சியும், சூரிய கிரகணமும் நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். அரசு வேலை செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்திற்கான சிறப்பான வாய்ப்புக்களைப் பெறுகூர்கள். பணிபுரிபவர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதால், புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். முக்கியமாக பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சனி பெயர்ச்சியும், சூரிய கிரகணமும் நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உறவினர்களுடனான உறவு வலுவடையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நிதி நிலை வலுவடையும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். இந்த நட்பினால் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சனி பெயர்ச்சியும், சூரிய கிரகணமும் நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவார்கள். இதன் மூலம் நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். பரம்பரை சொத்துக்களின் மூலம் நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
மேலும் உங்களின் பேச்சு வழக்கத்தை விட வலுவாக இருக்கும். பேச்சால் பல முக்கியமான வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
வேத ஜோதிடத்தில் சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் பயணிப்பார். நவகிரகங்களில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருபவர் நீதிமான் தான் சனி பகவான். இந்த சனி பகவான் 2025 ஆம் ஆண்டில் மார்ச் 29 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த மீன ராசியில் சனி பகவான் 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை இருப்பார்.
2025-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியின் போது சனி பகவான் மீன ராசிக்கு செல்கிறார். இதனால் மீன ராசிக்கு ஏழரை சனியின் இரண்டாம் கட்டமும், மேஷ ராசிக்கு ஏழரை சனியின் முதல் கட்டமும், கும்ப ராசிக்கு ஏழரை சனியின் கடைசி கட்டமும் நடக்கும்.
2025-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியினால் கடக ராசிக்கு அஷ்டம சனி விலகுகிறது, சிம்ம ராசிக்கு அஷ்டம சனி தொடங்குகிறது. அதேப் போல் விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டம சனி விலகுகிறது. தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனி தொடங்குகிறது.



Click it and Unblock the Notifications