Latest Updates
-
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
சனிப்பெயர்ச்சிக்கு பின் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றத்துடன், லாபமும் கிடைக்கப்போகுது...
Saturn Transit In Pisces On 29 March 2025: வேத ஜோதிடத்தில் உள்ள நவகிரகங்களின் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் பாரபட்சம் பாராமல் ஒருவரது கர்மத்திற்கு ஏற்ற பலன்களைத் தருவார்.
இப்படிப்பட்ட சனி பகவான் கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியை மாற்றுவதற்கு 2 1/2 ஆண்டுகள் ஆகும். இதனால் சனி பகவானின் ராசி மாற்றத்தின் தாக்கம் ஒருவரது வாழ்க்கையில் நீண்ட காலம் இருக்கும்.

தற்போது சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் வருகிற மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்லவுள்ளார். மீன ராசியின் அதிபதி குரு பகவான். சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் குரு பகவானின் மீன ராசிக்கு செல்லவுள்ளார்.
இந்த சனிபகவானின் ராசி மாற்றத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். குறிப்பாக இந்த சனிப்பெயர்ச்சிக்கு பின் சில ராசிக்காரர்கள் சனியின் பிடியில் இருந்து விடுபட்டு, வாழ்க்கையில் பலவிதமான நன்மைகளைப் பெறவுள்ளனர். முக்கியமாக அந்த ராசிக்காரர்கள் சனி பகவானின் ஆசீர்வாதங்களைப் பெறவுள்ளனர்.
இதன் விளைவாக ஒவ்வொரு வேலையிலும் வெற்றியைப் பெறுவதோடு, தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறவுள்ளனர். இப்போது 2025 சனிப்பெயர்ச்சிக்கு பின் எந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சனிப்பெயர்ச்சிக்கு பின் சனிபகவானின் ஆசியால் பல சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அதுவும் எதிர்பாராத சில நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வேலை மற்றும் வணிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணத்தினால் நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்கும்.
மேலும் நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய முதலீடுகளை செய்ய நினைத்து முயற்சித்தால், நல்ல பலன் கிடைக்கும். முக்கியமாக இதுவரை சந்தித்து வந்த மன அழுத்தம் குறைந்து, உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறவுள்ளனர். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வருவதோடு, கைக்கு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு ஒவ்வொரு வேலையிலும் கிடைக்கும்.
அதே சமயம் தொழிலதிபர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாயப்புக்கள் உள்ளன. சமூகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டிற்கு சனி பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பணியிடத்தில் பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
நிறைய பணத்தை சேமிக்க முடியும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. நீதிமன்ற வழக்குகள் நடந்து வந்தால், அதில் வெற்றி பெறுவீர்கள். ஏழரை சனி நடப்பதால், ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
* திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, 2025 ஆம் ஆண்டின் மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்லவுள்ளார்.
* 2025 சனிப்பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது.
* மகர ராசிக்காரர்கள் ஏழரை சனியின் பிடியில் இருந்து விலகுகிறார்கள்.
2025 சனிப்பெயர்ச்சியின் போது மீன ராசியின் முதல் வீட்டிற்கு சனி பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பணியிடத்தில் பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். நிறைய பணத்தை சேமிக்க முடியும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. நீதிமன்ற வழக்குகள் நடந்து வந்தால், அதில் வெற்றி பெறுவீர்கள். ஏழரை சனி நடப்பதால், ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
* ஜோதிடத்தில் நிழல் கிரகங்களாக கருதப்படும் ராகு-கேது 2025 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி ராசியை மாற்றவுள்ளனர்.
* ராகு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்லவுள்ளார்.
* கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு செல்லவுள்ளார்.



Click it and Unblock the Notifications