Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம்
30 ஆண்டுகளுக்கு பின் சனி, சூரியனால் உருவாகவுள்ள சமசப்தக் யோகம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..
Saturn Sun Make Samsaptak Yog After 30 Years: ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி சுப மற்றும் அசுப யோகத்தை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும.
அந்த வகையில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஆகஸ்ட் 16 ஆம் தேதி தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் செல்லவுள்ளார். அதே வேளையில் சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இதனால் இவ்விரு கிரகங்களும் ஒவ்வொருக்கொருவர் 180 டிகிரியில் இருப்பர் மற்றும் 7 ஆவது வீட்டில் இருப்பார்கள்.

இதன் விளைவாக சமசப்தக் யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதுவும் பண விஷயத்தில் மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்போது சமசப்தக் யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சமசப்தக் யோகமானது சற்று மோசமாக இருக்கும். இக்காலத்தில் ஏதாவது ஒரு விஷயம் உங்களுக்கு அதிக மன அழுத்தத்தைக் கொடுக்கும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். முதலீடுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியம் மோசமடையக்கூடும். இக்காலத்தில் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சமசப்தக் யோகமானது மோசமாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் பண இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதால், பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு தொழில் சற்று மந்தமாக இருக்கும். ஆரோக்கியம் மோசமடையக்கூடும். பேச்சை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், உங்கள் பேச்சே பல பிரச்சனைகளை உருவாக்கும். தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். இதனால் உங்கள் பட்ஜெட் பாழாகும். கண்டதை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால், அந்த பணம் கைக்கு வராமல் போகும். ஏழரை சனி நடப்பதால், கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சமசப்தக் யோகமானது சற்று தீங்கை உண்டாக்கும். இக்காலத்தில் வழக்கத்தை விட அதிக செலவை சந்திக்க நேரிடும். மேலும் தேவையற்ற மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். எதிர்மறை எண்ணங்கள் மனதில் அதிகம் எழும். தந்தையுடனான உறவு மோசமடையும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு இல்லாததால், வேலை மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை பெற முடியாமல் போகும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகளை அதிகம் சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications