Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் பிப்ரவரி 22 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியப்போகுது...
Saturn Nakshatra Transit 2026: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர் சனி பகவான். இதன் காரணமாக இவர் நீதிமான் என்று அழைக்கப்படுகிறார். பொதுவாக சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார் மற்றும் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
அப்படி சனியின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் தெரியும். அந்த வகையில் தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். அதோடு உத்திரட்டாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் உள்ளார். இந்நிலையில் சனி பகவான் பிப்ரவரி 22 ஆம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் பயணிக்கவுள்ளார்.

இப்படி சனியின் நிலையில் ஏற்படும் மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு மோசமாக இருந்தாலும், சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்க போகிறது. குறிப்பாக ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியுடன், நிதி நிலையில் நல்ல முன்னேற்றமும் ஏற்படவுள்ளது. இப்போது சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல பலன்களைப் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். சனி பகவானின் அருளால் கஷ்டங்கள் குறைந்து, வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். முக்கியமாக பண பிரச்சனைகள் தீரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
மிதுனம்
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவார்கள். மேலும் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஆர்டர்களைப் பெறுவார்கள். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆனால் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்
சனி பகவானின் நட்சத்திர மாற்றத்தால் மீன ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சனி பகவானின் ஆசியால் உங்களின் பெயரும், புகழும் அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மேலும் தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். ஆனால் யாருடனும் வாக்குவாதத்தில் ஈபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
