Latest Updates
-
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
30 ஆண்டுகள் கழித்து சனி-புதனின் அரிய சந்திப்பு: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்..
Saturn Mercury Conjunction In Pisces 2026: வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் தங்களின் நிலைகளை அடிக்கடி மாற்றுவதோடு, அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் சில கிரகங்களின் சேர்க்கை மிகவும் அரிதாக, பல ஆண்டுகளுக்கு பின் நிகழும். அப்படி ஏற்படும் கிரக சேர்க்கையின் தாக்கம் இன்னும் கூடுதல் தாக்கத்தை அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் உண்டாக்கும்.
அந்த வகையில் நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். மேலும் இவர் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார் மற்றும் இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார். தற்போது இந்த சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் மற்றும் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியுமான புதன் ஏப்ரல் மாதத்தில் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இப்படி மீன ராசியில் புதன் நுழைவதால், சனி மற்றும் புதனின் அரிய சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையானது மீன ராசியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது.
இந்த அரிய சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் தங்களின் தொழிலில் எதிர்பாராத அளவில் முன்னேற்றத்தைக் காணவுள்ளனர். இப்போது 30 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் சனி புதனின் அரிய சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சனி மற்றும் புதனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படும். நீண்ட காலமாக பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டிருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சம்பள உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் மற்றும் சனியின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். கூட்டு தொழிலை தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும். இக்காலத்தில் எடுக்கும் முடிவுகள் உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும். ஆனால் முதலீடுகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு எதிலும் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். தொழில் ரீதியாக இந்த சேர்க்கையானது நல்ல முன்னேற்றத்தைத் தரும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சனி மற்றும் புதனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்கள் தங்கள் பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றின் மூலம் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் புதிய முதலீடுகளை செய்வதாக இருந்தால், அனுபவசாலிகளின் கருத்தைப் பெற அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
