Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் புதன்-ராகுவின் அரிய சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கோடி கோடியா கொட்டப்போகுது...
Rahu Mercury Conjunction In Pisces 2025: ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் ராகு. இந்த ராகு எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கக்கூடியவர். இந்த ராகு ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை பயணிப்பார். தற்போது ராகு மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், பிப்ரவரி 27 ஆம் தேதி குரு பகவானின் ராசியான மீன ராசிக்குள் நுழையவுள்ளார்.
ஏற்கனவே ராகு இந்த ராசியில் பயணித்து வரும் நிலையில், புதனும் நுழைவதால், மீன ராசியில் ராகு மற்றும் புதன் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர். இந்த அரிய சேர்க்கையானது சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது. இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.

முக்கியமாக திடீர் பண வரவால் நிதி நிலையில் உயர்வு ஏற்படவுள்ளது. இப்போது 18 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் அரிய சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார். தொடர் கொள்ளும் திறன் மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். படைப்பு வேலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வணிகர்கள் சிக்கிய பணத்தை திரும்ப பெறுவார்கள். ஊடகம், மார்கெட்டிங், எழுத்து தொடர்பான வேலை செய்பவர்களுக்கு இக்காலத்தில் நிறைய நற்பலன்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராகிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். ஏற்கனவே செய்திருந்த முதலீடுகளில் இருந்து நல்ல பலன்கள் கிடைக்கும். புதிய முதலீடுகளை செய்தாலும், அதிலிருந்தும் நல்ல லாபம் கிடைக்கும். வணிகம், முதலீடு, பங்கு சந்தை, பரம்பரை சொத்துக்களில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய வணிகத்தைப் பெறுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் ராகு சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வை பெறுவதோடு, வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். முக்கியமாக இக்காலத்தில் தந்தையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
