Latest Updates
-
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்!
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப்போகுது..
Mercury Rise In Aquarius 2026: நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவது மட்டுமின்றி, அவ்வப்போது அஸ்தமனமாகி உதயமாகவும் செய்து, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் புதன் கிரகங்களில் மிகவும் வேகமாக தனது நிலையை மாற்றக்கூடியர்.
இப்படிப்பட்ட புதன் இதுவரை கும்ப ராசியில் அஸ்தமன நிலையில் பலவீனமாக இருந்தார். ஆனால் பிப்ரவரி 10 ஆம் தேதி புதன் கும்ப ராசியில் உதயமாகியுள்ளார். இதனால் புதன் தற்போது இருமடங்கு பலத்துடன் உள்ளார். மேலும் புதன் கும்ப ராசியில் உதயமாகும் போது, சுக்கிரனுடன் சேர்ந்து ஏற்கனவே லட்சுமி நாராயண ராஜயோகத்தையும் உருவாக்கியுள்ளார்.

ஆகவே இந்த புதன் உதயம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக 4 ராசிக்காரர்கள் தங்கள் வருமானத்தில் நல்ல உயர்வையும், தொழிலில் முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். இப்போது புதன் உதயமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் உதயமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் வழக்கத்தை விட சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். வேலையில் நல்ல வெற்றியை அடைவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் அதிக லாபத்தைப் பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் உதயமாகியுள்ளார். இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். எதிரிகளுக்கு ஒரு பாடத்தை கற்பிப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். இதன் மூலம் வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆரோக்கிய பிரச்சனையால் இதுவரை சிரமப்பட்டு வந்தால், இனி அதிலிருந்து விடுபடுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். நிதி பிரச்சனைகள் குறையும். சிறிய முதலீடுகளும் நல்ல பலனைத் தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பெற்றோரின் ஆதரவால் ஒரு பெரிய முயற்சியில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். இக்காலத்தில் நீங்கள் எடுக்கும் நிதி தொடர்பான முடிவுகள் நீண்ட கால நன்மைகளை வழங்கும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வணிகத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வருமானம் அதிகரிக்கும். வங்கி தொடர்பான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். கடன் பிரச்சனைகள் தீரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். எதிர்மறை எண்ணங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். காதல் உறவுகள் வலுவடையும். குடும்ப வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சந்தித்து வந்த பிரச்சனைகள் தீரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications




