Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
100 ஆண்டுகளுக்கு பின் புதன் உருவாக்கும் இரட்டை நீச்சபங்கராஜயோகம்: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கபோகுது
Mercury Make Double Neechbhang Rajyog 2025: வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் யோகங்களையும் உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
இந்த புதன் பிப்ரவரி 27 ஆம் தேதி மீன ராசிக்கு செல்லவுள்ளார். புதன் மீன ராசியில் நுழைவதால், நீச்சபங்க ராஜயோகம் உருவாகிறது. அதே சமயம் இந்த மீன ராசியில் சுக்கிரனும் உள்ளார். இதனால் மீன ராசியில் ஒரு அரிய இரட்டை நீச்சபங்க ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நல்ல நிதி ஆதாயத்தைப் பெறவுள்ளனர். இப்போது புதனால் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இரட்டை நீச்சபங்க ராஜயோகமானது பல நன்மைகளை வழங்கப் போகிறது. அதுவும் இந்த யோகத்தால் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பங்குச்சந்தை, லாட்டரி மூலம் நிறைய லாபத்தைப் பெறக்கூடும். தொழிலில் எதிர்பாராத சில சிறப்பான பலன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
சிம்மம்
இரட்டை நீச்சபங்க ராஜயோகத்தால் சிம்ம ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் இந்த காலத்தில் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். முதலீடுகளை செய்திருந்தால் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகள் நிறைய லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசு வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இரட்டை நீச்சபங்க ராஜயோகமானது புதிய சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை மற்றும் வணிகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். மொத்தத்தில் இரட்டை நீச்சபங்க ராஜயோகம் இரட்டிப்பு நன்மைகளை அளிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
