Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
செவ்வாய் விருச்சிக ராசிக்கு செல்வதால் உருவாகும் ருச்சக ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்கள் ராஜாவாக போறாங்களாம்...!
Mars transit 2025: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் அதிபதி என்று அழைக்கப்படும் செவ்வாய், 45 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றிக் கொள்கிறார். எனவே செவ்வாய் ஒரு ராசி சுழற்சியை முடிக்க குறைந்தது 22 மாதங்கள் ஆகும். செவ்வாய் சஞ்சாரம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
2025-ல் அக்டோபர் 27ம் தேதி செவ்வாய் பெயர்ச்சி நடைபெறப் போகிறது. இந்த முறை செவ்வாய் துலாம் ராசியை விட்டு தனது சொந்த ராசியான விருச்சிக ராசியில் பிரவேசிப்பார். செவ்வாய் சொந்த ராசியில் நுழைவது ருச்சக ராஜயோகத்தை உருவாக்கும். மிகவும் சக்தி வாய்ந்த இந்த ராஜயோகம் 22 மாதங்களுக்குப் பிறகு உருவாகிறது.

ருச்சக ராஜயோகம் பஞ்ச மகாபுருஷ ராஜயோகங்களில் ஒன்றாகும். ருச்சக ராஜயோகம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் சிறப்பான பலன்களை அளிக்கும், ஆனால் மூன்று ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தின் முழுப் பலனையும் அனுபவிக்கப் போகும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
செவ்வாய் மிதுன ராசியின் 6-ம் வீட்டில் நுழையப் போகிறார். மிதுன ராசிக்காரர்களுக்கு ருச்சக ராஜயோகத்தின் மூலம் அதிர்ஷ்ட காலம் தொடங்கப் போகிறது. நீண்ட நாட்களாக செய்ய முடியாமல் இருந்த கடினமான காரியங்கள் கூட இந்த காலகட்டத்தில் எளிதாக முடிவடையும். மேலும் இந்த ராஜயோகத்தின் மூலம் மிதுன ராசியினரின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்ம் இது அவர்களுக்கு பெரிய வெற்றியைத் தரும்.
குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது, இது மகிழ்ச்சியை அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்கள் உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்களையும், நன்மைகளையும் பெறுவார்கள். வியாபாரம் செய்பவர்களும் வியாபாரத்தில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் அடையக்கூடிய காலமாக இது இருக்கும்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு ருச்சக ராஜயோகம் அற்புதமான பலன்களைக் கொடுக்கும். இந்த ராஜயோகம் அவர்களின் மூன்றாவது வீட்டில் உருவாகிறது. இது வீரத்துடன் தொடர்புடைய அம்சமாகும். இந்த நேரத்தில் எதிர்பாராத ஆறுதலும், நம்பிக்கையும் உருவாகும். ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும், தொண்டு மற்றும் புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
குழந்தைகள் தொடர்பாக சில நல்ல செய்திகள் தேடிவரும். சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க அல்லது வியாபாரத்தில் முன்னேற்றம் அடைய இது ஒரு நல்ல நேரம். புதிய வாகனம் அல்லது சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
விருச்சிகம்
செவ்வாய் ஆளும் ராசியான விருச்சிக ராசியின் லக்னத்தில் ருச்சக ராஜயோகம் உருவாகிறது. இது இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயங்களையும், பிற நன்மைகளையும் கொண்டு வரும். வேலையில் இருப்பவர்கள் பணியில் எதிர்பாராத நன்மைகளைப் பெறலாம்.
அரசு ஊழியர்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சமுதாயத்தில் அந்தஸ்தும், நற்பெயரும் மேம்படும். உடல்நிலை திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

