Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
செவ்வாய் சனிபகவான் ஆளும் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம்...உங்க ராசி என்ன?
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல சக்திவாய்ந்த கிரக மாற்றங்கள் நடைபெறப்போகிறது. கிரகங்களின் தளபதியான செவ்வாய் தற்போது மகர ராசியில் அமைந்துள்ளது. இன்னும் சில நாட்களில், அது கும்ப ராசிக்கு நகரப்போகிறது. இது 2026-ன் முக்கியமான கிரக பெயர்ச்சிகளில் ஒன்றாகும். செவ்வாய் கிரகம் ஆற்றல், தைரியம் மற்றும் உத்வேகத்தைக் குறிக்கிறது. ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருந்தால் அது அவர்களுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கப்போகிறது. மகர ராசியின் அதிபதியாக சனிபகவான் இருக்கிறார்.
2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி காலை 11:33 மணிக்கு செவ்வாய் கிரகம் கும்ப ராசியில் நுழைகிறது. இந்த கிரக மாற்றத்தில் உள்ள சிக்கல் என்னவெனில், செவ்வாய் மற்றும் சனி கிரகங்களுக்கு இடையே நட்புரீதியான உறவு இல்லை. எனவே, செவ்வாய் கிரகம் சனியின் ராசியான கும்பத்தில் நுழையும்போது, அது மிகவும் பதட்டமான மாற்றங்களை உருவாக்கலாம். இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் இருந்தாலும் சில ராசிக்காரர்கள் இந்த மாற்றத்தால் துரதிர்ஷ்டங்களுக்கு ஆளாகப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு, இந்த செவ்வாய் பெயர்ச்சி சவாலானதாக அமையலாம். செவ்வாய் ரிஷப ராசியினி பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால், செலவுகள் அதிகரிக்கவும், வேலையில் அதிருப்தி ஏற்படவும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் பரவலான கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும், இது மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும்.
இந்த காலகட்டத்தில் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த பெயர்ச்சியின் போது கடன் வாங்குவதைத் தவிர்க்கவும் மற்றும் கவனமாக வாகனம் ஓட்டவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றத்தை உணரலாம். வேலையில் இருப்பவர்கள் அலுவலகத்தில் சாதகமற்ற சூழலில் அனுபவிக்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியின் பொது செவ்வாய் நான்காம் வீட்டில் சஞ்சரிப்பதால், அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும், அவர்களின் உணர்ச்சி சமநிலையைக் குலைக்கக்கூடும். உறவுகளில் பதட்டங்கள் அதிகரிக்கலாம், மேலும் கடந்த காலத்திலிருந்த தீர்க்கப்படாத பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கலாம். வீட்டில் நடக்கும் சிறிய விஷயங்கள் கூட எரிச்சல் அல்லது பதட்டத்தைத் தூண்டக்கூடும்.
கவனமாக இருப்பதும், மற்றவர்களுடன் முக்கியமான தகவல்களைப் பகிர்வதைத் தவிர்ப்பதும் நல்லது. மாணவர்கள் மற்றும் அரசு வேளைக்கு தயாராகுபவர்கள் அவர்கள் அழுத்தம் உணரக்கூடும். நண்பர்களிடமிருந்து சில விரும்பத்தகாத செய்திகளைப் பெறுவதற்கு வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களின் லக்னத்தில் இந்த பெயர்ச்சி நடைபெறுவதால் அவர்கள் இதன் பாதிப்பை வலுவாக உணரக்கூடும். செவ்வாய் முதல் வீடு அல்லது லக்னத்தின் வழியாக நகரும். கும்ப ராசி சனியால் ஆளப்படுவதாலும், செவ்வாய் மற்றும் சனி நட்பு கிரகங்கள் அல்ல என்பதாலும், இந்த காலகட்டத்தில் அவர்கள் மிகவும் கவனமாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.
அவர்களின் முன்னேற்றப் பாதையில் திடீர் தடைகள் தோன்றக்கூடும். சில தேவையற்ற செலவுகள் தேடிவரக்கூடும். உறவுகளில், அவசரம் அல்லது ஆடம்பரமான நடத்தை பிரச்சினைகளை உருவாக்கக்கூடும். மாணவர்கள் நினைத்த முடிவுகளை அடைய கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
