Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
18 ஆண்டுகளுக்கு பின் 2026-ல் உருவாகும் அங்காரக யோகம்: இந்த 3 ராசிக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. உஷார்..
Angarak Yog In Aquarius 2026: ஜோதிடத்தின் படி, 2026 ஆம் ஆண்டில் மங்களகரமான சுப யோகங்கள் மட்டுமின்றி, பல அசுப யோகங்களும் உருவாகவுள்ளன. இவ்வாறு உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிழல் கிரகமான ராகுவுடன் சேர்ந்து அசுப யோகத்தை உருவாக்கவுள்ளார். அது தான் அங்காரக யோகம். இந்த யோகமானது மிகவும் மோசமான யோகங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.

வேத நாட்காட்டியின் படி, செவ்வாய் பிப்ரவரி மாதத்தில் கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கும்ப ராசியில் ஏற்கனவே நிழல் கிரகமான ராகு பயணித்து வருகிறார். இதனால் இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் அங்காரக யோகம் உருவாகவுள்ளது.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரிந்தாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் வாழ்க்கையில் பல சிரமங்களை சந்திக்கவுள்ளனர். குறிப்பாக நிதி இழப்பு மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். இப்போது 2026-ல் உருவாகும் அங்காரக யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் செவ்வாய் ராகு சேர்க்கையால் அங்காரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பார்கள். நீதிமன்றம் தொடர்பான வழக்குகளில் தோல்வியை சந்திக்க நேரிடும். இரத்தம் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும். இக்காலத்தில் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு முதலீடுகளையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். பண பரிவர்த்தனைகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் செவ்வாய் ராகு சேர்க்கையால் அங்காரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நோய்களால் அவதிப்படக்கூடும். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். இதய பிரச்சனையைக் கொண்டவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வணிகர்கள் ஆபத்தான முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். எந்த அவசர முடிவுகளை எடுத்தாலும், இழப்புக்களை சந்திக்க நேரிடும். முக்கியமாக இக்காலத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் ராகு சேர்க்கையால் அங்காரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் சந்தோஷம் குறைவும். திருமணமானவர்கள் திருமண வாழ்க்கையில் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் திடீரென்று நிறைய புதிய பொறுப்புக்களை பெறக்கூடும். இதனால் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். காதல் வாழ்க்கையில் பொறுமையின்மையை தவிர்க்க வேண்டும். மேலும் கூட்டு தொழில் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
