Latest Updates
-
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்!
18 மாதம் கழித்து சொந்த ராசியில் செவ்வாய் உருவாக்கும் ருச்சக ராஜயோகம்:இந்த 3 ராசிக்கு கூரையபிச்சு பணம் கொட்டும்
Mars Make Ruchaka Rajyog 2025: ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய், ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார்.
தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் செவ்வாய், விருச்சிகம் மற்றும் மேஷ ராசிகளின் அதிபதியாவார். இந்த செவ்வாய் வருகிற அக்டோபர் மாதத்தில் தனது சொந்த ராசியான விருச்சிக ராசிக்கு செல்லவுள்ளார். இந்த விருச்சிக ராசிக்கு செவ்வாய் சுமார் 18 மாதங்கள் கழித்து செல்லவுள்ளார்.

இப்படி சொந்த ராசிக்கு செவ்வாய் செல்வதால் பஞ்ச மகாபுருஷ ராஜயோங்களில் ஒன்றான ருச்சக ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகம் மிகவும் சக்தி வாய்ந்த ராஜயோகங்களுள் ஒன்றாகும். இந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அதில் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும், நிதி நிலையில் நல்ல உயர்வும் ஏற்படப் போகிறது. அதோடு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களும் தேடி வரும் வாய்ப்புள்ளது. இப்போது 18 மாதங்கள் கழித்து சொந்த ராசியில் செவ்வாய் உருவாக்கும் ருச்சக ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டில் ருச்சக ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் தேடி வரலாம். ஒவ்வொரு வேலையும் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பரம்பரை சொத்துக்களால் நல்ல மகிழ்ச்சியை அடைவீர்கள். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவதோடு, முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களையும் பெறுவார்கள். இக்காலத்தில் உறவினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டில் ருச்சக ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதோடு தைரியமும், வீரமும் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் செவ்வாயின் அருளால் முக்கியமான திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்கள் சிறப்பான முடிவால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல நன்மைகளைப் பெறுவார்கள்.
கடகம்
கடக ராசியின் 5 ஆவது வீட்டில் ருச்சக ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். ஏற்கனவே வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும். மேலும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். முக்கியமாக சிக்கிய பணத்தை பெறும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications