Latest Updates
-
World Alzheimer's Day 2026: அல்சைமர் நோய் பற்றிய 10 பொதுவான கேள்விகளுக்கு நரம்பியல் நிபுணரின் பதில்கள்! -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா?
முடிவுக்கு வந்த கேது-செவ்வாய் சேர்க்கை: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது..
Mars Ketu Conjunction Ends On 28 July 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் துணிச்சல் நிறைந்தவர்கள், தைரியசாலியாக, எதற்கும் அஞ்சாதவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்ட செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார்.
இந்த செவ்வாய் இதுவரை சிம்ம ராசியில் பயணித்து வந்தார். இந்த சிம்ம ராசியில் ஏற்கனவே நிழல் கிரகமான கேது பயணித்து வந்தார். இதனால் சிம்ம ராசியில் செவ்வாய் மற்றும் கேதுவின் சேர்க்கையால் அழிவுகரமான அங்காரக யோகம் உருவாகியிருந்தது. இந்நிலையில் ஜூலை 28 ஆம் தேதி செவ்வாய் சிம்ம ராசியில் இருந்து வெளியேறி, கன்னி ராசிக்குள் நுழைகிறார். இதனால் செவ்வாய் மற்றும் கேதுவின் சேர்க்கையால் உருவாகியிருந்த அங்காரக யோகம் முடிவுக்கு வந்துள்ளது.

இப்படி அங்காரக யோகம் முடிவுக்கு வந்துள்ளதால், இதுவரை வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்தவர்களின் வாழ்வில் சந்தோஷம் அதிகரித்து, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படப் போகிறது. இப்போது முடிவுக்கு வந்துள்ள செவ்வாய் கேது சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
செவ்வாய் கேது சேர்க்கை முடிவுக்கு வந்துள்ளதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு இனிமேல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்சனைகள் நீங்கி, உறவுகள் மேம்படும். மேலும் தொழிலில் இதுவரை பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அது நீங்கி, நல்ல நன்மைகளைப் பெறக்கூடும். மன அமைதி கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, உடல்நலம் மேம்படும். முக்கியமாக தன்னம்பிக்கையும், துணிச்சலும் அதிகரிக்கும்.
துலாம்
செவ்வாய் மற்றும் கேதுவின் சேர்க்கை முடிவுக்கு வருவதால், துலாம் ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு அதிகரிப்பதைக் காணக்கூடும். இதனால் நிதி நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பங்குச்சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்தும் எதிர்பாராத அளவில் நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மற்றும் கேதுவின் சேர்க்கை முடிவுக்கு வருவதால், திடீர் நிதி நன்மைகள் கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களையும் தரும். ஏற்கனவே மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்தால், அதிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
