Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
நவம்பரில் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
Malavya Rajyog In Libra On 02 November 2025: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது தங்கள் ராசியையும், நட்சத்திரத்தையும் மாற்றுவது மட்டுமின்றி, அடிக்கடி தனது நிலைகள் மற்றும் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன்.
இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் ரிஷபம், துலாம் ஆகிய ராசிகளின் அதிபதியும் கூட. இந்த சுக்கிரன் வருகிற நவம்பர் 02 ஆம் தேதி தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். துலாம் ராசிக்கு செல்வதால், மிகவும் மங்களகரமான ராஜயோகமான மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்க இந்த ராஜயோகமானது அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறது. இதன் விளைவாக தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல உயர்வைக் காணவுள்ளனர். இப்போது சுக்கிரனால் உருவாகும் மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கை துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும் வாய்ப்புள்ளது. வருமானத்தில் உயர்வு ஏற்படலாம். பல வழிகளில் இருந்தும் பணம் தேடி வரும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டில் சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் கணிசமாக அதிகரிக்கும். வேலை தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நன்மைகளை வழங்கும் வகையில் இருக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். இக்காலத்தில் சில நற்செய்திகளைப் பெறக்கூடும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றால் நல்ல பலனைப் பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அல்லது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். மேலும் வருமானமும் உயரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











