Latest Updates
-
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்!
ஆகஸ்ட் 27-ல் உருவாகும் சக்தி வாய்ந்த மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..
Mahalakshmi Rajyog On 27 August 2025: ஜோதிடத்தில் உள்ள நவகிரகங்களின் மிகவும் வேகமாக நகரக்கூடியவர் தான் சந்திரன். இந்த சந்திரன் ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் வரை இருப்பார். மனதின் காரணியான சந்திரன் கடக ராசியின் அதிபதியாவார். குறுகிய நாட்களில் ராசியை மாற்றுவதால், சந்திரன் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவார்.
அந்த வகையில் சந்திரன் செவ்வாயுடன் கன்னி ராசியில் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளார். சந்திரனும் செவ்வாயும் ஒன்றிணைவதால் மிகவும் சக்தி வாய்ந்த மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகமானது ஆகஸ்ட் 27 ஆம் தேதி உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

இருப்பினும் சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் லட்சுமி தேவியின் ஆசியை பெறுவார்கள். இதனால் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும், நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது செவ்வாய் சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி ராஜயோகமானது பல வழிகளில் நன்மை பயக்கும். முதல் வீட்டில் இந்த ராஜயோகம் உருவாவதால், இந்த ராசிக்காரர்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். தாயுடனான உறவு நன்றாக இருக்கும். நீண்ட காலமாக வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி பிரச்சனைகள் தீர்ந்து, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் 3 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் பேச்சுத்திறன் மேம்படும். வணிகர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் புதிய பொறுப்புக்களை வழங்கலாம். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களும் கிடைக்கும். வாழ்க்கையில் இதுவரை இருந்த பிரச்சனைகள் அனைத்தும் குறையும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். சிறந்த பேச்சாற்றல் காரணமாக மார்கெட்டிங், பத்திரிக்கை துறையில் இருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் 8 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் ஏராளமான நன்மைகளைப் பெறுவார்கள். முக்கியமாக நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகளை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கையில் இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருந்தால், இக்காலத்தில் நல்ல வேலையைப் பெறக்கூடும். லட்சுமி தேவியின் அருளால் பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications