Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
Maha Shivratri 2026: மகா சிவராத்திரி நாளில் சொல்ல வேண்டிய 12 ராசிக்காரர்களுக்குமான சிவ மந்திரங்கள்!
Maha Shivratri 2026: துர்கா தேவிக்கு நவராத்திரி என்றால், சிவபெருமானுக்கு மகா சிவராத்திரி. இந்த மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானின் ஆசியைப் பெற பக்தர்கள் விரதமிருந்து சிவனுக்கு சிறப்பு பூஜைகளை செய்து, வழிபாடு செய்வார்கள். அதுவும் இரவு முழுவதும் கண் விழித்து, சிவனை மனதில் நினைத்து, வழிபடுவார்கள்.
அதுவும் மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவபெருமானின் அருளைப் பெற, அவருக்கு உகந்த மகா சிவராத்திரி நாளில் அவரவர் ராசிக்கு ஏற்ற சிவ மந்திரத்தை பாராயணம் செய்வது நல்லது.

அதுவும் இந்த மந்திரத்தை ஒருவர் மகா சிவராத்திரி நாளில் மட்டுமின்றி, தினமும் எந்த வேலையை செய்வதற்கு முன்பும் சொல்வதன் மூலம், அந்த வேலை தடையின்றி வெற்றிகரமாக நடக்கும். கீழே மகா சிவராத்திரி நாளில் சொல்ல வேண்டிய 12 ராசிக்காரர்களுக்குமான சிவ மந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேஷம்
செவ்வாயை அதிபதியாக கொண்டவர்கள் மேஷ ராசிக்காரர்கள். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் சிவனுக்கு உரிய "ஓம் நாகேஸ்வராய நமஹ" என்னும் மந்திரத்தை சொல்வது நல்லது.
ரிஷபம்
சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷப ராசியைச் சேர்ந்தவர்கள், மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானுக்கு உரிய "ஓம் த்ரிநேத்ராய நமஹ" என்னும் மந்திரத்தை சொல்வது நல்லது.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த மிதுன ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளன்று " ஓம் திரிபுராந்தகாய நமஹ" என்னும் சிவ மந்திரத்தை சொல்லலாம்.
கடகம்
சந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசியைச் சேர்ந்தவர்கள் மகா சிவராத்திரி நாளில் "ஓம் சந்திரசேகராய நமஹ" என்னும் சிவபெருமானுக்கு உரிய மந்திரத்தை பாராயணம் செய்வது நல்லது.
சிம்மம்
சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளன்று "ஓம் மகேஸ்வராய நமஹ" என்னும் சிவ மந்திரத்தை சொல்வது நல்லது.
கன்னி
கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் விஸ்வநாதாய நமஹ" என்னும் சிவபெருமானுக்கு உரிய மந்திரத்தை மகா சிவராத்திரி நாளில் சொல்வது நல்லது.
துலாம்
சுக்கிரனை அதிபதியாக கொண்ட துலாம் ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளன்று "ஓம் சந்திரமௌலேஸ்வராய நமஹ" என்னும் சிவ மந்திரத்தை பாராயணம் செய்வது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த விருச்சிக ராசியைச் சேர்ந்தவர்கள் மகா சிவராத்திரி நாளில் "ஓம் சங்கராய நமஹ" என்னும் சிவபெருமானுக்கு உரிய மந்திரத்தை சொல்ல வேண்டும்.
தனுசு
குரு பகவானை அதிபதியாக கொண்ட தனுசு ராசியைச் சேர்ந்தவர்கள் மகா சிவராத்திரி நாளன்று "ஓம் சிவாய நமஹ" என்னும் சிவ மந்திரத்தை பாராயணம் செய்வது நல்லது.
மகரம்
மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த மகர ராசிக்காரர்கள் சிவபெருமானுக்கு உரிய மகா சிவராத்திரி நாளில் "ஓம் திகம்பராய நமஹ" என்னும் சிவ மந்திரத்தை சொல்வது நல்லது.
கும்பம்
சனி பகவானை அதிபதியாக கொண்ட கும்ப ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளன்று "ஓம் நம சிவாய" என்னும் சிவனின் மூல மந்திரத்தை பாராயணம் செய்வது நல்லது.
மீனம்
மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த மீன ராசியை சேர்ந்தவர்கள் சிவனுக்கு உரிய மகா சிவராத்திரி நாளில் "ஓம் மகாதேவாய நமஹ" என்னும் சிவ மந்திரத்தை சொல்வது நல்ல பலனைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


