Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
மகா சிவராத்திரி நாளில் உதயமாகும் புதன்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
Maha Shivratri 2025 Mercury Rise In Aquarius: 2025 ஆம் ஆண்டின் மகா சிவராத்திரி பிப்ரவரி 26 ஆம் தேதி வருகிறது. மகா சிவராத்திரியானது சிவபெருமானுக்கு உரிய நாளாகும். இந்நாளில் தான் சிவபெருமானும் பார்வதி தேவியும் திருமணம் செய்து கொண்டதாக நம்பப்படுகிறது. இந்த சுப நாளில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து வழிபட்டு வந்தால், சிவனின் பரிபூர்ண ஆசி கிடைக்கும்.
இந்த மகா சிவராத்திரி நாளானது ஜோதிடத்தைப் பொறுத்தவரையிலும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த நாளில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் உதயமாகவுள்ளார். புதன் உதயமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக சில ராசிக்காரர்கள் மிகவும் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது மகா சிவராத்திரி நாளில் கும்ப ராசியில் உதயமாகும் புதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
மகா சிவராத்திரி நாளில் புதன் உதயமாவதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. அதுவும் சிவனின் ஆசியால் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்குவதோடு, பண பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். மேலும் படிப்பில் பலவீனமாக இருக்கும் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். அதோடு இந்த ராசிக்காரர்களின் குழந்தைகள் பெற்றோருக்கு பெருமையைத் தேடி தருவார்கள்.
மிதுனம்
மகா சிவராத்திரி நாளில் உதயமாகும் புதனால் மிதுன ராசிக்காரர்கள் பல நல்ல செய்திகளைப் பெறுவார்கள். எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைத் தரும். மாணவர்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பார்கள். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பிரச்சனைகளில் இருப்பவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
மகா சிவராத்திரி நாளில் புதன் உதயமாவதால் சிம்ம ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். முக்கியமாக வாழ்க்கையில் ஒரு பெரிய நல்ல மாற்றத்தைக் காண்பார்கள். நீண்ட காலமாக குடும்பத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திக்கலாம் அல்லது நல்ல வரனைப் பெறலாம். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கன்னி
கும்ப ராசியில் உதயமாகும் புதனால் கன்னி ராசிக்காரர்களின் சிந்திக்கும் திறன் மேம்படும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் சந்திக்கும் பிரச்சனைகளை சமாளிக்கும் திறன் மேம்படும். நீண்ட காலமாக நடந்து வரும் சட்ட விஷயங்கள் முடிவுக்கு வருவதோடு, தீர்ப்புகளும் சாதகமாக வரும். பேச்சால் பல முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும் வாய்ப்புள்ளது.
கும்பம்
மகா சிவராத்திரி நாளில் புதன் கும்ப ராசியில் உதயமாவதால், இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பலவிதமான நற்பலன்களைப் பெறுவார்கள். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவு மேம்படும். பெற்றோருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
