Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
துலாம் ராசியில் உருவாகும் லட்சுமி நாராயண யோகம்: அக்டோபரில் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது...
Lakshmi Narayan Yog In Libra On October 2024: ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்களானது குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைபெறும். அவ்வாறு கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் இணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் செப்டம்பர் 18 ஆம் தேதி நுழைந்தார். அதைத் தொடர்ந்து கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் அக்டோபர் 10 ஆம் தேதி துலாம் ராசிக்குள் நுழைந்து பயணிக்கவுள்ளார். இதனால் துலாம் ராசியில் சுக்கிரன் மற்றும் புதனின் சேர்க்கையால் மிகவும் மங்களரமான ராஜயோகமான லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படவுள்ளது. இப்போது துலாம் ராசியில் உருவாகவுள்ள லட்சுமி நாராயண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். நீண்ட காலமாக அலுவலகத்தில் சிந்தித்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நீண்ட நாட்களாக தொடங்க நினைத்த வேலைகளை இக்காலத்தில் தொடங்கினால் வெற்றி காணலாம். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படும். அதே வேளையில் சம்பள உயர்வும் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகவுள்ளது. இதனால் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். சொத்துக்களில் முதலீடுகளை செய்வதன் மூலம் நல்ல லாபத்தைப் பெறலாம். மேலும் இக்காலத்தில் செய்யும் முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்தும் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் சிறப்பான செயல்திறனால் பதவி உயர்வுடன், சம்பள உயர்வையும் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
