Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
மே மாதத்தில் 2 முறை நடக்கும் கேது பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Ketu Transit Will Happen Twice In May 2025: வேத ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் தான் கேது. இந்த கேது ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த கேது கிரகம் நமது ஆன்மாவுடன் தொடர்புடைய ஆழமான செயல்முறைகளை பாதிக்கிறது.
கேதுவின் ராசி மாற்றம் ஒருவரது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் கேது ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் வரை இருப்பார். கிரகங்களிலேயே சனி பகவானுக்கு அடுத்தப்படியாக ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிக்கக்கூடிய கிரகம் என்றால் அது கேது மற்றும் ராகு ஆவர்.

இந்த கேது 2025 ஆம் ஆண்டின் மே மாதம் 18 ஆம் தேதி ராசியை மாற்றவுள்ளார். இந்த ராசி மாற்றத்தின் போது கேது சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். கேது சிம்ம ராசிக்குள் நுழையும் அதே சமயம் உத்திரம் நட்சத்திரத்திற்கும் இடம் பெயரவுள்ளார். இப்படி ஒரே வேளையில் கேது பகவான் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றவுள்ளதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சற்று அதிகமாக தெரியும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், சிலர் கவனமாக இருக்க வேண்டியிருக்கும். இப்போது மே மாதத்தில் 2 முறை நடக்கும் கேது பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மே மாதத்தில் இரண்டு முறை நடக்கும் கேது பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் உள்ளோரிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். இதன் காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு தேர்வுகளைப் பற்றிய அச்சம் அதிகரிக்கும். இந்த அச்சம் மன அழுத்தத்திற்கு கொண்டு செல்லும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களை இழக்கலாம். வயதானவர்களாக இருந்தால் ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகம் சந்திக்க நேரிடும்.
தனுசு
மே மாதத்தில் இரண்டு முறை நடக்கும் கேது பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகம் ஏற்படலாம். உங்கள் துணையின் மௌனம் உங்களை மனதளவில் பெரிதும் பாதிக்கும். இக்காலத்தில் புதிய சொத்தை வாங்கவோ அல்லது எதையும் வாடகைக்கு எடுக்கவோ நினைத்தால், அதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. வயதானவர்களாக இருந்தால், மிகுந்த மன உளைச்சல் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கும்பம்
மே மாதத்தில் இரண்டு முறை நடக்கும் கேது பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழிலில் முதலீடு செய்யும் எண்ணம் இருந்தால், அதை தவிர்க்க வேண்டும். இக்காலத்தில் எந்த ரிஸ்க்கையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வணிகர்கள் நஷ்டத்தைத் தரும் ஒப்பந்தங்களை ஒப்புக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இருக்காது. மொத்தத்தில் மே மாதம் கும்ப ராசிக்காரர்களுக்கு மோசமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
