Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
12 ஆண்டுகள் கழித்து குரு உருவாக்கும் சக்திவாய்ந்த ராஜயோகம்: அக்டோபரில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்..
Kendra Trikon Rajyog 2025: ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, சுப மற்றும் ராஜயோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் மிகவும் மங்களகரமான கிரகம் தான் குரு பகவான். இந்த குரு பகவான் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் அக்டோபர் 18 ஆம் தேதி குரு பகவான் சந்திரனின் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கடக ராசிக்கு குரு பகவான் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் செல்கிறார். கடக ராசிக்கு செல்லும் குரு பகவானால் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

முக்கியமாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலும் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். இப்போது கடக ராசிக்கு செல்லும் குரு பகவானால் உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டிற்கு குரு பகவான் சென்று கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பார்கள். சிலருக்கு பதவி உயவு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு குரு பகவான் சென்று கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். சமூகத்தில் நல்ல உயரத்தை அடைவார்கள். புதிய வருமான வழிகள் திறக்கப்படும். குருவின் அருளால் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பேச்சாற்றல் அதிகரிக்கும். பேச்சால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
மீனம்
மீன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு குரு பகவான் சென்று கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிதாக திருமணம் செய்திருந்தால், அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, காதலர்களிடையேயான பிணைப்பு அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
