Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
2025-ல் நடக்கும் குரு பெயர்ச்சியால் மே முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Jupiter Transit In Gemini On 14 May 2025: வேத ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். நவகிரகங்களில் குரு பகவான் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக கருதப்படுகிறார் மற்றும் இந்த குரு பகவான் அறிவு, ஞானம், செல்வம், குழந்தைகள், திருமணம் ஆகியவற்றின் காரணியாகவும் கருதப்படுகிறார். இப்படிப்பட்ட குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். மேலும் குரு பகவான் ஒரு ராசியில் ஒரு ஆண்டு காலம் பயணிப்பார். இதனால் ஒரு ராசி சுழற்சியை முடிக்க சுமார் 12 ஆண்டுகள் ஆகும்.
தற்போது குரு பகவான் சுக்கிரனின் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் குரு பகவான் 2025 ஆம் ஆண்டின் மே 14 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். குரு பகவானின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த குரு பெயர்ச்சியால் ஏராளமான நன்மைகளைப் பெறவுள்ளனர்.

வேத நாட்காட்டியின் படி, குரு பகவான் மே 14 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார். இந்த மிதுன ராசியின் அதிபதி புதன். புதனின் ராசிக்கு குரு பகவான் செல்வதால், எந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
2025 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சியால் ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குருவின் பார்வை 6, 8 மற்றும் 10 ஆவது வீட்டின் மீது விழுவதால் பரம்பரை சொத்துக்களைப் பெறக்கூடும்.
மேலும் பரம்பரை தொழிலில் ஈடுபட்டிருந்தால், ஏராளமான நன்மைகளைப் பெறக்கூடும். தொழிலில் எதிரிகளை திறம்பட வீழ்த்தி வெற்றி பெறுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு இனிமையாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் நிலை வலுபெறும். பேச்சினால் பல முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இதன் மூலம் நிதி நிலையும் வலுபெறும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நீண்ட காலமாக சந்தித்து வந்த பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
குழந்தைகளால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உங்கள் பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. உடன் பிறந்தவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். உடல் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
பணிபுரிபவர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மேலும் இந்த ராசிக்காரர்களின் முடிவெடுக்கும் திறன் சிறப்பாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் நல்ல வெற்றி கிடைக்கும். மொத்தத்தில் குரு பகவானின் ஆசியால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
