Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
200 ஆண்டுகளுக்கு பின் பிப்ரவரியில் உருவாகும் 4 ராஜயோகங்கள்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது...
Four Rajyogas Will Form In February 2026 After 200 Years: ஜோதிடத்தின் படி, பிப்ரவரி மாதத்தில் பல கிரகங்கள் தங்களின் நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, பல்வேறு சுப யோகங்களை உருவாக்கவுள்ளன. அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். முக்கியமாக பிப்ரவரி மாதத்தில் 4 மங்களகரமான ராஜயோகங்கள் உருவாகவுள்ளன.
அதில் சுக்கிரன் மற்றும் புதனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம், சுக்கிரன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் சுக்ராதித்ய ராஜயோகம், செவ்வாய் மற்றும் சூரியனின் சேர்க்கையால் ஆதித்ய மங்கள ராஜயோகம் மற்றும் புதன், சூரியன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இந்த 4 ராஜயோகங்கள் ஒரே மாதத்தில் அதுவும் பிப்ரவரியில் சுமார் 200 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளன. இப்படி உருவாகும் ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது பிப்ரவரியில் உருவாகும் 4 ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
பிப்ரவரியில் உருவாகும் 4 ராஜயோகங்களால் கன்னி ராசிக்காரர்கள் நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் வருமானத்தில் நல்ல உயர்வைக் காண்பார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெறிகரமாக முடிவடையும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
மேஷம்
பிப்ரவரியில் உருவாகும் 4 ராஜயோகங்களால் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். வருமானத்தில் கணிசமான உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. புதிய வேலை மற்றும் தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இம்மாதத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் முதலீடுகளை செய்தால், நல்ல லாபத்தைப் பெறக்கூடும். மொத்தத்தில் நிதி ரீதியாக பிப்ரவரி மாதம் மிகவும் அற்புதமாக இருக்கும்.
கும்பம்
பிப்ரவரியில் உருவாகும் 4 ராஜயோகங்களால் கும்ப ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். இம்மாதத்தில் வழக்கத்தை விட தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியதையும் அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். பணியிடத்தில் செயல்திறன் மேம்படும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். முக்கியமாக நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
