Latest Updates
-
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம்
கும்பத்தில் 4 கிரக சேர்க்கையால் உருவாகும் சதுர்கிரக யோகம்: மார்ச் 02 முதல் இந்த 3 ராசிக்கு ராஜயோகம் அடிக்கும்!
Chaturgrahi Yog On 2 March 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அடிக்கடி ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் சேர்ந்து யோகங்கனை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் வாழ்க்கையில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மார்ச் மாத தொடக்கத்தில் சனி பகவானின் கும்ப ராசியில் ஒரு அற்புதமான யோகம் உருவாகவுள்ளது.
அதுவும் இந்த ராசியில் 4 கிரகங்கள் ஒன்றிணைந்து சதுர்கிரக யோகத்தை உருவாக்கவுள்ளனர். இந்த யோகத்தின் போது கிரகங்களின் ராஜாவான சூரியனும், புத்திகாரகனான புதனும், நிழல் கிரகமான ராகுவும், கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாயும் கும்ப ராசியில் இருப்பார்கள். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

ஜோதிடத்தின் படி, இந்த யோகமானது ஒருவரது வாழ்வில் மாற்றத்தையும், முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழலையும் கொண்டு வரும். இப்போது கும்ப ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது எதிர்பார்த்த இடமாற்றத்தைப் பெற வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமை மேம்படும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களின் தொடர்பு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றி கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்வர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. வணிகத்தில் புதிய திட்டங்களால் நல்ல லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அவசரப்படாமல் பொறுமையாக முதலீடுகளை செய்தால் நல்ல லாபத்தைப் பெறலாம். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் முயற்சித்தால் நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நன்கு யோசித்து எடுக்கும் முடிவுகள் நல்ல லாபத்தைத் தரும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
